SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அமெரிக்கா இடைக்காலத் தேர்தல்: டிரம்புக்கு ஷாக் கொடுத்த ஜனநாயக கட்சி.. கைமாறும் செனட் சபை.. ஏன் முக்கியம்?

US Midterm Election Explained: அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும், ஜனநாயக கூட்சி தற்போதைய நிலவரப்படி, முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, செனட் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. செனட் சபை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 04, 2026, 10:22 AM IST | Updated: Nov 04, 2026, 11:46 AM IST
Join

US Midterm Election Explained: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அவைக்கான தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், நேற்று (நவம்பர் 3) அமரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, இன்று அதிகாலை முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இரு அவைகளிலும் பெரும்பான்மை கொண்டுள்ள அதிபர் டிரம்புக்கு, இந்த தேர்தல் ஒரு அக்னிப் பரீட்சையாகும். மேலும், இடைக்காலத் தேர்தல் பதவியில் இருக்கும் அதிபரின் செயல்பாடுகளுக்கான மக்கள் தீர்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

செனட் சபையை இழந்த டிரம்ப் கட்சி

அமெரிக்காவில் உள்ள பிரநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மேலும், செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது.  வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை பெற்று வருகிறது. குறிப்பாக, செனட் சபையை டிரம்பின் குடியரசுக் கட்சி இழந்தது. செனட் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. செனட் சபையில்  100 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களில் ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றது. மொத்தமாக செனட் சபையில் 100 இடங்களில் 55 இடங்களை தற்போது வரை ஜனநாயக கட்சி  கைப்பற்றியது.

டிரம்பின் குடியரசுக் கட்சி 44 இடங்களில் மட்டுமே தற்போது வரை வென்றுள்ளது. அதேபோல, தற்போதைய நிலவரப்படி, பிரநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் ஜனநாயக கட்சி 210இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குடியரசுக் கட்சி 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்தால் என்னென்ல்லாம் நடக்கும் என்பதை பார்ப்போம். 

மேலும் படிக்க: Explained | அமெரிக்க இடைத்தேர்தல் 2026 முடிவுகள் எப்போது? யார் கைப்பற்றுவார்கள் காங்கிரஸை?

மேலும், பிரநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையைக் கைப்பற்றுவார்கள் என கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிரம்ப் திட்டவட்டம்

இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் போட்டியிட்டிருந்தால் தனது குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்று கூறினார். நான் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை, ஒருவேளை இடம்பெற்றிருந்தால், நாங்கள் அமோக வெற்றி பெற்றிருப்போம் என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

 

அமெரிக்கா அதிபருக்கு என சில வீட்டோ (Veto) அதிகாரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி அதிபர் சில முடிவுகளை எடுக்கலாம். அதனைக் கருத்தில் கொண்டு அதிபர் டிரம்ப் இவ்வாறு தனது இணையதளத்தில் பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகியவற்றில் பெரும்பான்மையைக் கைப்பற்றி வலுவடைந்த நிலையில் டிரம்ப் இந்த எச்சரிக்கையைப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலைப்பின்படி, பிரநிதிகள் அவையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினாலும், அதிபர் தன் வீட்டோ (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரிக்க முடியும். எதிர்க்கட்சியினரான ஜனநாயக கட்சியினர கொண்டு வரும் சட்டவரைவுகள், கொள்கைகளை நிறைவேற்ற விடாமல் தனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பேன் என்பதை உணர்த்துவதற்காகவே டிரம்ப் இதனை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலுவடைந்தாலும், அதிபராகத் தான் கொண்டுள்ள வீட்டோ அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்பதை  டிரம்ப் கூறுவதாக சொல்லப்படுகிறது.

செனட் சபை என்றால் என்ன?

அமெரிக்க செனட்டின் வரலாறு சுவாரசியமானது.  அமெரிக்காவின் செனட் என்பது இந்தியாவின் மாநிலங்களவை போன்றது. செனட் அவையில் மொத்த 100 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு  தேர்தல்கள் நடத்தப்படும். இதில் 2 வருடத்துக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு செனட் தேர்தலை சந்திக்கும். ஒரு செனட்டரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். 

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இருந்தும் மாநிலத்திற்கு 2 உறுப்பினர்கள் இருப்பார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தில் (U.S. Congress) செனட் (Senate) என்பது மேலவையாகும். அமெரிக்காவில் சட்டங்களை இயற்றுவதிலும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் செனட் மிக முக்கியமான அதிகாரம் வாய்ந்த அமைப்பாக செயல்படுகிறது. அமெரிக்காவின் துணைத் தலைவர் தான் செனட்டின் தலைவராக செயல்படுவார்.

மேலும் படிக்க: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!

செனட் சபையின் அதிகாரங்கள்

சட்டம் இயற்றுதல் - பிரநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒரு மசோதா சட்டமாக மாறும்.

உயர்பதவிகளுக்கான ஒப்புதல் - அதிபரால் நியமிக்கப்படும் நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் தூதர்களின் நியமனங்களுக்கு சென்ட் சபை உறுப்பினர்களின் ஒப்புதல் முக்கியம்.

சர்வதேச ஒப்பந்தங்கள் - அமெரிக்க அதிபர் பிற நாடுகளுடன் செய்யும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு செனட்டின் 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதிபர் மீதான குற்ற விசாரணை - பிரதிநிதிகள் சபையால் குற்றஞ்சாட்டப்படும் அதிபர் அல்லது அரசு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை நடத்தி, அவர்களை பதவியிலிருந்து நீக்கும் இறுதி அதிகாரம் செனட்டிற்கு உண்டு.

துணை அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் - புதிய துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் செனட் சபைக்கு மட்டுமே செல்லும் (அதேவேளையில் அதிபரைப் பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுக்கும்).

நிதி தொடர்பான திருத்தங்கள்: நிதி தொடர்பான மசோதாக்களில் எந்தவொரு திருத்தத்தைகளை செய்யும் அதிகாரம் செனட் சபைக்கு உண்டு.  

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை மக்கள் தொகையின் அடிப்படையில் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தாலும், செனட் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை (மாநிலத்திற்கு 2 இடங்கள்) வழங்கி நாட்டின் முக்கிய கொள்கைகளைத் தீர்மானிக்கிறது.

மேலும் படிக்க: Explainer: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலை என்ன?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES