SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: அமெரிக்க அதிபரின் Veto அதிகாரம்... டிரம்பால் என்ன செய்ய முடியும்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்ததால், தனது நிர்வாகத் திட்டங்களைக் காக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் VETO அதிகார்ததை முன்னிறுத்துகிறார்.

Written By Sudharsan G
Published: Nov 04, 2026, 10:26 PM IST | Updated: Nov 04, 2026, 10:43 PM IST
Join

US Midterm Election 2026, Veto Power Explained: அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி, 2026 இடைக்கால தேர்தல் நடந்தது.உடனே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் வெளியாகின.

இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதிபராக டிரம்ப் பதவியில் இருந்தாலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாவிட்டால் அவரது திட்டங்களைச் சட்டமாக்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

குறிப்பாக, எதிர்க்கட்சியினர் பெரும்பான்மை பெற்றால் அரசின் முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதைத் தடுக்க முடியும். இந்நிலையில், தேர்தல் முடிவுகளின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளது.

மேலும் படிக்க | அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2026: செனட், ஹவுஸ், ஆளுநர் போட்டிகளில் வென்றவர்களின் முழு பட்டியல்

மேலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் டிரம்ப் அரசு கொண்டுவரும் சட்ட மசோதாக்கள், வரவு செலவு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளுக்கு ஜனநாயக கட்சியின் ஆதரவு அல்லது எதிர்ப்பை சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் இருக்கட்சிகளின் எண்ணிக்கை

அவை  ஜனநாயக கட்சி குடியரசு கட்சி
செனட் (100) 54 (+2 சுயேட்சை ஆதரவு)44
பிரதிநிதிகள் சபை (435)  228  139

*இந்திய நேரப்படி இரவு 10 மணி நிலவரம்

டிரம்ப் போட்ட VETO பதிவு

 

VETO அதிகாரம் என்றால் என்ன?

மேலும் படிக்க | Explained : அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றிய தேர்தல்! வரலாற்றில் இடம்பிடித்த வெற்றியாளர்கள்

VETO அதிகாரத்தை மீற முடியுமா?

பிரதிநிதிகள் சபை: மொத்தம் உறுப்பினர்கள் - 435, ஆதரவு அளிக்க வேண்டிய உறுப்பினர்கள் - 290

செனட்: மொத்தம் உறுப்பினர்கள் - 100, ஆதரவு அளிக்க வேண்டிய உறுப்பினர்கள் - 67

Pocket VETO என்றால் என்ன?

அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்ன நடக்கும்?

இன்னும் பாக்கியிருக்கும் டிரம்பின் இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தில், அமெரிக்க அரசியலில் கடும் அதிகாரப் போட்டியை இந்த 2026 இடைக்காலத் தேர்தல் முடிவுகள் கொண்டுவந்துள்ளன எனலாம். இதன்மூலம், அடுத்தடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்பதை இங்கு சுருக்கமாக காணலாம்,

1. சட்ட மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை: குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, அரசு செலவினங்கள் உள்ளிட்ட டிரம்ப் அரசின் முக்கியத் திட்டங்களுக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, அவற்றுக்கு முட்டுக்கட்டை போடாம்.

2. அரசு மீதான விசாரணைகள்: பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு ஜனநாயக கட்சியிடம் வந்துள்ளது. இதனால், டிரம்ப் அரசின் கொள்கை முடிவுகள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக அவற்றால் விசாரணையை முன்னெடுக்க முடியும்.

3. நியமனங்களுக்கு பிரச்னை: செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் அமைச்சரவை மற்றும் நீதித்துறை சார்ந்த முக்கிய பதவிகளுக்கான டிரம்ப்பின் நியமனங்களை எதிர்க்க முடியும்.

4. VETO மூலம் அதிகாரப் போட்டி: ஜனநாயகக் கட்சியினர் நிறைவேற்றும் மசோதாக்களை டிரம்ப் நிராகரிக்கலாம். இதனால், இது இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை, அரசியல் மோதல்கள் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

இதன்மூலம், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெறப்றி, நாடாளுமன்றத்தின் அதிகாரச் சமநிலையை மாற்றி உள்ளது. இருப்பினும் அதிபராக டிரம்ப் தொட்ரந்து செயல்படுவார். அவரிடம் VETO அதிகாரம் உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரங்கள் நீடிக்கின்றன.

எனவே இரண்டு ஆண்டுகளில் சட்டங்களை நிறைவேற்றவதற்கும், அரசின் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கும் வெள்ளை மாளிகைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே ஒத்துழைப்பும், மோதலும் கலந்த அரசியல் சூழல் உருவாகலாம்.

மேலும் படிக்க | Explainer: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலை என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES