• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /அங்கிள் விஜய் அவர்களே... இவ்வளவு வீக்கான முதல்வரை பார்த்ததே இல்லை - ஸ்டாலின் அட்டாக்

அங்கிள் விஜய் அவர்களே... இவ்வளவு வீக்கான முதல்வரை பார்த்ததே இல்லை - ஸ்டாலின் அட்டாக்

முதலமைச்சர் விஜய்யை அங்கிள் என குறிப்பிட்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்வைத்தார். கோவையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பாராட்டு விழாவில் ஸ்டாலின் பேசியவற்றை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Nov 04, 2026, 11:27 PM IST|Updated: Nov 04, 2026, 11:36 PM IST
joinshare
அங்கிள் விஜய் அவர்களே... இவ்வளவு வீக்கான முதல்வரை பார்த்ததே இல்லை - ஸ்டாலின் அட்டாக்
Image Credit: MK Stalin (Left), CM Vijay (Right) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அங்கிள் விஜய் அவர்களே... இவ்வளவு வீக்கான முதல்வரை பார்த்ததே இல்லை - ஸ்டாலின் அட்டாக்

அங்கிள் விஜய் அவர்களே... இவ்வளவு வீக்கான முதல்வரை பார்த்ததே இல்லை - ஸ்டாலின் அட்டாக்

2

Explained: அமெரிக்க அதிபரின் Veto அதிகாரம்... டிரம்பால் என்ன செய்ய முடியும்?

3

செஞ்சி சிறுமியை நாமக்கலில் பார்த்தேன்... உடன் இருந்த 3 பேர் - பெண் பரபரப்பு பேட்டி

4

தீபாவளிக்கு பின் ஊர் திரும்ப... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க

5

செம மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஜான் டோ’! எப்போ ரிலீஸ்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் திராவிடர் கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு இன்று (நவ. 4) கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மேடையில் பேசிய ஸ்டாலின், "நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து ஒரு விதமான மகிழ்ச்சி. கூச்சம் கலந்த மனநிலையில் இருந்தேன், அந்தளவு பாராட்டுத் தள்ளிவிட்டீர்கள். என்ன பேசுவது என தெரியாத நிலையில் இருக்கிறேன். பாராட்டோடு அன்பையும் பாசத்தையும் பொழிந்து இருக்கிறார்கள். இது திமுகவிற்கு தாய் கழகத்தின் அன்பு முத்தம்.

மேலும் படிக்க | ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு புதிய விதிமுறை! அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

பாதையை திர்மானிக்கும் பெரியார் திடல்

திராவிட மாடல் ஆட்சி சாதனைக்கான பாராட்டாக எடுத்து கொள்வதை விட இன்னும் செய்ய வேண்டிய பணிகளுக்கு ஊக்கமாக எடுத்து கொள்கிறோம். அறிவு புரட்சியின் அடையாளமாக நூல்கள், நூலகங்களை திமுக ஆட்சியில் அமைத்திருக்கிறோம்.

பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன்! தந்தை பெரியாரும் - பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள் - பொய்கள் - போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது Healthy Politics அல்ல; Filthy Politics! நமது Phone-களுக்குப் பரப்படும் Message-களும் Influencer Video-க்களும் தகவல்கள் மட்டும்தான். தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது! அதற்கான அறிவியல் பார்வை தழைத்து, பெரியார் கண்ட அறிவுலகம் நிலைக்கட்டும்! #PeriyarArivulagam #Kovai #Library @Asiriyar_KV

— M.K.Stalin (@mkstalin) November 4, 2026

பெரியார் அறிவுலகம் கோவையின் புதிய அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது; பெரியார் அறிவுலகத்திற்கான பாராட்டு விழா என ஆசிரியர் உத்தரவிட்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையை திர்மானிப்பது பெரியார் திடல் என்று சொன்னவன் நான்.
என்னையும் காத்தவர் ஆசிரியர்தான். ஒரு வருடம் மிசாவில் அவர் பாதுகாப்பில்தான் இருந்தேன்.

99% பணிகளை முடித்த திமுக

என் மீதான விமர்சன தாக்குதல்களையும் முறியடிப்பவர் ஆசிரியர்தான். என் மீது எவ்வளவு பாசமோ அதே அளவு பாசமும் மரியாதையும் வைத்து இருக்கின்றேன். ஓய்வு எடுங்கள், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைஞரின் மகனாக உரிமையோடு சொல்கின்றேன்" என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை பாராட்டி பேசினார்.

பெரியார் அறிவுலகத்தை கோவையின் அடையாளமாக, தமிழகத்தின் அடையாளமாக உருவாக்கினோம். கோவை பெரியார் நூலகம் 99% பணிகள் முடுவடைந்த நிலையில் அதிக பார்த்து சென்ற போதுதான் தேர்தல் அறிவுப்பு  வந்தது. எ.வ.வேலு 10 முறைக்கும் அதிகமாக கோவைக்கு பெரியார் அறிவுலகத்திற்கு வந்து இருப்பார்.

பவர் செண்டர்கள் வித்தை காட்டும் சர்க்கஸ் சர்க்கார்! #PeriyarArivulagam #Kovai #Library https://t.co/QCzctDGv5C

— M.K.Stalin (@mkstalin) November 4, 2026

பெரியார் அறிவுலகம் ஓர் அடையாளம்

பெரியார் அறிவுலகம் எப்படி இருக்க வேண்டும், சிலை எப்படி இருக்க வேண்டும் உட்பட பல்வேறு அறிவுறுத்தல் கொடுத்து கொண்டே இருந்தேன். செந்தில் பாலாஜியிடமும் பெரியார் அறிவுலக பணிகளை  கேட்டுக்கொண்டே இருந்தேன். 5 ஆண்டுகளில் கோவைக்குதான் அரசு விழாக்களில் அதிக முறை வந்து இருக்கின்றேன்.

செம்மொழி பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம், சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என பல பணிகளை பொறுப்பாக பார்த்து கொண்டவர் செந்தில் பாலாஜி. இதில் மணிமகுடமாக அமைந்தது பெரியார் அறிவுலகம். என்னால் மறக்க முடியாத சாதனையாக இந்த பெரியார் அறிவுலகம் அமைந்து இருக்கிறது.

தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்களின் துர்நாற்றம்! #PeriyarArivulagam #Kovai #Library https://t.co/l22EMpiBjJ

— M.K.Stalin (@mkstalin) November 4, 2026

மேலும் படிக்க | MLA-க்களை வாங்கும் டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி சரமாரி கேள்வி..

நூலகம் எதற்கு சிலர் கேட்டனர்...?

நாம் பார்க்கும் தமிழகத்தை செதுக்கியவர் பெரியார். பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்தது கடமை. நன்றியை எதிர்பார்த்து செய்யவில்லை. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வைத்தோம். உலகமே டிஜிட்டல் ஆகும் போது இது தேவையா என சிலர் கேட்டார்கள்.

மதுரை மாதிரியே கோவை , திருச்சியில் அமைக்க திட்டமிட்டோம். அனைத்து நூலகமும் கலைஞர் பெயரில் வைப்போம் என சொன்னா்கள். நான்தான் பிற தலைவர்கள் பெயரில் வைக்கலாம் என சொன்னேன், சொன்னபடியே செய்துட்டோம். கடலூரில் அஞ்சலை அம்மாள், சேலத்தில் பாரதிதாசன் பெயரில் பணிகளை துவங்கினோம்.

விஜய் பின் இருக்கும் கார்ப்பரேட் பவர்சென்டர்

தற்போது தமிழகத்தில் சொல்லப்படாமல் பணிகள் நிறுத்தப்படுகின்றது. சேலம், திருநெல்வேலி நூலகங்களுக்கு இந்த நிலை வந்துவிடக்கூடாது. ஜோசியர் சொன்ன தேதியில் வந்து திறந்து பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்திருக்கின்றார். முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், என்ன பொட்டு வைக்கனும் என்பதை ஜோசியர் சொல்வதை செய்கின்றார்.

Weak CM Vijay #TVKFails #PeriyarArivulagam #Kovai #Library https://t.co/jEJoAMrMBS

— M.K.Stalin (@mkstalin) November 4, 2026

ஒரே பவர்சென்டர் என்றார், ஆனால் அவர் பின்னாடி இருக்கும் கார்ப்பரேட் பவர்சென்டர். முதல்வரை வைத்து எல்லாம் செய்கின்றது. யாரெல்லாம் இந்த ஆட்சி வரவேண்டும் என வாக்களித்தார்களோ, அவர்கள் புலம்புகின்றனர். மின்வெட்டு பிரச்சினையை இந்த அரசால் சரி செய்ய முடியவில்லை.

அங்கிள் விஜய் அவர்களே...

கோவையில் ஒரு மாதத்தில் 10 கொலைகள் நடந்து இருக்கின்றது, கொலை நகரமாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போய் வருகின்றனர். தவெகவில் பாலியல் குற்றவாளிகளுக்கும், போதை குற்றவாளிகளுக்கும் தனிப் பிரிவு இருக்கும் போல... முதல்வர்  10 - 5 வேலைக்கு போவதாக பாவனை காட்டுகின்றார். இரு நாட்கள் விடுமுறை வேறு.

அங்கிள் விஜய் அவர்களே... இது சினிமா சூட்டிங் இல்லை. திருச்சி தேர்தலை வைத்து நேரு வீட்டில் திரும்ப திரும்ப சோதனை செய்கிறார்கள். திமுக எப்போதும் அஞ்சாது. அழுத்த அழுத்ததான் மேலே எழுவோம், இது திமுக டி.என்.ஏ. முதலமைச்சர் எந்த தவறுக்காவது பொறுப்பு ஏற்கின்றாரா..?

இப்போ நடிகர் விஜய் இல்லை...

மெத்தபெட்டமைன் வைத்திருந்த தவெக நிர்வாகி , அங்கிள் விஜய் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமா இல்லையா?. அங்கிள் விஜய் என்ன நடவடிக்கை எடுத்தார்.மாநில காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் ஓடுகிறார். நடிகர் விஜய் இல்லை, முதல்வர் விஜய் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

#PeriyarArivulagam #Kovai #Library https://t.co/jgq6z9C6zL

— M.K.Stalin (@mkstalin) November 4, 202

வேன் மீது ஏறி ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை பேசுகிறார். இவர் பேச அடிக்கடி இடைத்தேர்தலா நடத்த முடியும். பாலியல் குற்றங்களுக்கு இவர் கட்சிகாரர்கள் சிக்குகின்றனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு 37 கைதிகள் தப்பிச் சென்ற வரலாற்றை படைத்துள்ளார். ஃபைலை திறப்பேன் என்று கூறிவிட்டு ஜெயிலை திறக்கிறார்.

இது ஆரோக்கிய அரசியல் அல்ல

50 ஆண்டுகள் அவமானத்தை 5 மாதத்தில் பெற்றுவிட்டனர். இவ்வளவு வீக்கான முதல்வரை இதுவரை பார்த்ததே இல்லை. தமிழ்நாடு மக்களை இரண்டாவது முறையாக விஜய் ஏமாற்ற முடியாது. மக்களின் கண்ணீ்ர இந்த ஆட்சியை வரவிடாது. தவெக ஆட்சிக்கு இப்போது ரெட் அலார்ட். இந்த ஆட்சிக்கு புல் ஸ்டாப் வைப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது.

அவதூறுகளையும் போலி வீடியோகளையும் பரப்பி ஆளும் கட்சி செய்வது ஆரோக்கிய அரசியல் அல்ல. செல்போனில் தான் இளைஞர்கள், பெண்கள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். உண்மையை பார்த்து பொய்யும், வெளிச்சத்தை பார்த்து இருளும் பயப்படும். அதே போல தான் தவெகவினர் நூலகம் பார்த்து பயப்படுகிறார்கள்" என்றார்.

மேலும் படிக்க | ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
MK Stalin