SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

24 மணி நேரமாகியும் சரியாகாத பிரச்சினை! 1.5 லட்சம் புகார்கள்.. Microsoft-ல் நடந்தது இதுதான்?

Microsoft Outage Explained: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான டிஜிட்டல் சேவைகளான Outlook, Teams, Copilot உள்ளிட்டவை உலகம் முழுவதும் திடீரென முடங்கின. இதனால் அலுவலகப் பணிகள், இ-மெயில் பரிமாற்றம், ஆன்லைன் மீட்டிங் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. Downdetector தளத்தில் சுமார் 1.5 லட்சம் புகார்கள் பதிவாகின. இந்தியாவிலும் விமானச் சேவைகள் உட்பட பல்வேறு துறைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதிகப்படியான சர்வர் அழுத்தம் மற்றும் நெட்வொர்க் கோளாறே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Shiva Murugesan
Published: Nov 13, 2026, 05:43 PM IST | Updated: Nov 13, 2026, 05:46 PM IST
Image Credit: File | Outlook, Teams Down! Why Is Microsoft Still Struggling After 24 Hours?
Join

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகள் திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலகப் பணிகள், ஆன்லைன் மீட்டிங், இ-மெயில் பரிமாற்றம் என Microsoft 365, Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

நவம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட இந்த உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறால் இந்தியா, ஆஸ்திரேலியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் அவதியடைந்தனர்.

குறிப்பாக டெல்லியில் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, குறைந்தது 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருகட்டத்தில் Downdetector தளத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. அப்படி என்ன நடந்தது? மைக்ரோசாப்ட் சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கியதற்கு என்ன காரணம்? சைபர் தாக்குதலா அல்லது சர்வர் பிரச்சினையா? விரிவாகப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் முடங்கிய Microsoft சேவைகள்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு முக்கிய சேவைகள் ஒரே நேரத்தில் செயலிழந்ததால் தனிநபர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக Microsoft 365 சேவைகளைச் சார்ந்து இயங்கும் அலுவலகங்களின் அன்றாடப் பணிகள் முடங்கின.

Microsoft Global Outage: பாதிக்கப்பட்ட முக்கிய சேவைகள்:

இதனால் பல ஊழியர்களால் தங்களுடைய முக்கியமான பணிகளைச் சரியான நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க - முடங்கிய மைக்ரோசாப்ட்: அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் சேவைகள் பாதிப்பு!! யாருக்கெல்லாம் பிரச்சனை?

1.5 லட்சம் புகார்கள்.. இந்தியாவிலும் கடும் பாதிப்பு

நவம்பர் 12-ம் தேதி இந்திய நேரப்படி இரவு சுமார் 9.45 மணியளவில் மைக்ரோசாப்ட் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பயனர்கள் புகார் அளிக்கத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் வட அமெரிக்கப் பகுதிகளில் மட்டுமே பாதிப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நேரங்கல் இந்தியா, ஆஸ்திரேலியா, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் சேவை முடக்கம் எதிரொலித்தது.

சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector இணையதளத்தில் உலகம் முழுவதும் ஒரு கட்டத்தில் சுமார் 1.5 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் Outlook தொடர்பான புகார்கள் ஒரு கட்டத்தில் 2,000-ஐத் தாண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Outlook செயலியைத் திறக்க முடியாதது, இ-மெயில் அனுப்ப முடியாதது, கணக்கில் உள்நுழைவதில் சிக்கல் போன்ற புகார்கள் அதிகம் எழுந்தன.

டெல்லியில் விமானச் சேவைகள் பாதிப்பு

மைக்ரோசாப்ட் சேவை முடக்கத்தின் தாக்கம் அலுவலகப் பணிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. விமானப் போக்குவரத்துத் துறையிலும் இதன் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இண்டிகோ, ஆகாசா ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் இந்த உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் குறைந்தது 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனங்களின் டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் மற்றும் செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படும்போது பயணிகள் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதுமட்டுமின்றி பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் டிஜிட்டல் சேவைகளை நம்பியிருப்பதால் இந்த முடக்கம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Microsoft சேவைகள் முடங்கியதற்கு என்ன காரணம்?

இந்தப் பிரச்சினைக்கான ஆரம்பகட்ட விசாரணையில் சர்வர் மீது ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் மற்றும் நெட்வொர்க் இணைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. பாதிக்கப்பட்ட சர்வர்களில் பாதுகாப்பான இணைப்புகளை உருவாக்கும் செயல்முறையில் எதிர்பாராத அளவுக்கு அழுத்தம் ஏற்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இதனால் சில சர்வர்களால் பயனர்களின் கோரிக்கைகளுக்குச் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. இதன் விளைவாக Outlook, Teams உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில Configuration மாற்றங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைத் திரும்பப் பெறுவது, சர்வர்களின் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது

சைபர் தாக்குதலா? மைக்ரோசாப்ட் விளக்கம்

மைக்ரோசாப்ட் சேவைகள் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் முடங்கியதால், இது ஏதேனும் சைபர் தாக்குதல் அல்லது ஹேக்கிங் நடவடிக்கையாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் சைபர் தாக்குதலால் ஏற்பட்டதாக இதுவரை மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தவில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆரம்பகட்ட விசாரணையிலும் சைபர் தாக்குதலுக்கான ஆதாரம் வெளியாகவில்லை. எனவே தற்போதைய தகவல்களின் அடிப்படையில் சர்வர் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தொழில்நுட்பக் கோளாறாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

24 மணி நேரமாகியும் சரியாகாத பிரச்சினை

சேவைகளை மீண்டும் சீரமைக்க மைக்ரோசாப்ட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கவில்லை. குறிப்பாக நெட்வொர்க் தொடர்பான புதிய மாற்றங்களை சில சர்வர்களுக்கு முறையாகச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில Virtual Machines பழைய பாதிக்கப்பட்ட நிலையிலேயே சிக்கியிருப்பதால் புதிய மாற்றங்களை அவற்றுடன் ஒத்திசைக்க முடியவில்லை.

மைக்ரோசாப்ட் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

ஆனாலும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி செயல்படாததால் சேவைகளை முழுமையாகச் சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Microsoft சேவைகள் எப்போது முழுமையாகச் செயல்படும்?

மைக்ரோசாப்ட் சேவைகளை மீண்டும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அனைத்து சேவைகளும் எப்போது முழுமையாகச் சீராகும் என்பது குறித்து உறுதியான காலக்கெடு தெரியவில்லை. Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகளை அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் சேவைகள் முடங்கினால், உலகம் முழுவதும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க - ஏஐ 100 பேரை கொல்லும் ஆபத்தான டெக்னாலஜி! பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

ZEENEWS TRENDING STORIES