SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : பற்றி எரியும் ஃப்ரான்ஸ்! வலுக்கும் மாணவர்களின் போராட்டம்..வன்முறை உச்சக்கட்டம்

பிரான்ஸ் நாட்டில் மக்கள் போராடி வருவது, உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு என்ன காரணம்? இதோ முழு விவரம்..

Written By Yuvashree M
Published: Oct 18, 2026, 05:45 PM IST | Updated: Oct 18, 2026, 05:51 PM IST
Join

உலகளவில், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுபெற்று வருகிறது. வங்கதேசத்தில் ஆரம்பித்து, இலங்கை, இந்தியா, தற்போது பிரான்ஸ் வரை போராட்டங்களும், வன்முறையும் வெடித்திருக்கிறது. தற்போது பிரான்ஸ் நாட்டில் வரலாற்று கட்டடங்களுக்கு தீ வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரச்சனை!

பிரான்ஸ் நாட்டில், வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருவதாகவும், எரிபொருள் விலை உயர்ந்து வருவதாகவும் மக்கள் கருதுகின்றனர். இதனால் மக்கள் அரசின் பொது சேவைகள் மீதான அதிருப்தி காரணமாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டம், வன்முறையாக மாறியிருக்கிறது. இதனால், இந்த போராட்டத்தை களைக்க, நகர் முழுவதும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இந்த போராட்டத்தில் கடைகள் சூறையாடப்பட்டுள்ளது, வாகனங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், தீயில் கொளுத்துப்பட்டது. இந்த போராட்ட-வன்முறயில் சுமார் 1200 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நாடு முழுவதும் சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டங்களில் பங்கேற்றதாக தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 1.1 லட்சம் பேர் திறண்டதாக போலீஸார் உள்துறை அமைச்சர் லாரண்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நடத்திய போராட்டம்!

முதற்கட்டமாக, பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறியும், மோசமான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் முன்வைத்து, மாணவர்கள் போராட்டம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து, இந்த போராட்டம் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசின் பொருளாதார கொள்கைகளால் அதிருப்தியடைந்த மக்கள் இயக்கமாக விரிவடைந்தது.

தீவைப்பு-வன்முறை!

பாரிஸில் முதலில் அமைதியான முறையில்தான் பேரணி நடந்தது. பகலில் அமைதியாக இருந்த இந்த போராட்டம் மாலை வன்முறையாக மாறிவிட்டது. இதனால், குடியரசு சதுக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.

போராட்டக்காரர்களை களைகக், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தினர். வணிக நிறுவனங்கள் சூரையாடப்பட்டதுடன், கடைகளும் பெருவாரியாக சேதப்படுத்தப்பட்டன.

இந்த போராட்டம் பாரிஸை தாண்டி, பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அங்கும் வன்முறை வெடித்துள்ளது. இங்கிருக்கும் கட்டடங்களுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்ததாக கூற்றப்படுகிறது. மேலும், லியோன் நகரில், அடையாளமாக இருந்த சுற்றுலா அலுவலகம் இருந்த வரலாற்று கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டிடம் எரிந்து நாசமானது. மேலும், அவின்யோன், பாவ், வலான்ச், கிரெனோபிள் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நிலை மோசமானது.

பிரான்ஸ் அதிபர் கண்டனம்!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்த போராட்டம் குறித்து பேசுகையில், போராட்டங்களுக்கு எப்போதும் அனுமதி இருப்பினும், இது போன்ற வன்முறை சம்பவங்களை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், கடைகள் எரிப்பு, வரலாற்று சின்னங்களுக்கு தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களிலும், அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

போராட்டத்தின் போது, போலீஸார் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் லொகோர்னு குற்றம் சாட்டியிருக்கிறார். அதோடு, அடுத்த ஆண்டு நடக்கப்போகும் அதிபர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தேவா இசைக்கு உலக அரங்கில் கிடைத்த கவுரவம்.. சிங்கப்பூர் அதிபரின் இறுதிச் சடங்கில் ஒலித்த பாடல்!

போராட்டக்காரர்களின் வயது என்ன?

இந்த பிரான்ஸ் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், பொது மக்கள் மட்டும் கிடையாது. டீன் ஏஜில் உள்ள இளம் சிறார்களும்தான். இந்த போராட்டக்காரர்களில் பலர், கருப்பு உடை அணிந்தும், மாஸ்க் போட்டும், கண்ணாடி போட்டும் வந்துள்ளனர்.

அமைதியான பேரணியில் ஒரு சில போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், இந்த போராட்டம் வன்முறைக்களமாகி இருக்கிறது. இதில், டீன் ஏஜ் சிறார்களையும் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

போரட்டக்காரர்களின் கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், இப்படி வன்முறையை கையிலெடுக்க கூடாது என்பது அரசின் நிலைபாடாக இருக்கிறது.

இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்து மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் பேசுகையில், மாணவர்கள் தங்களது பள்ளிகள், அதிகளவில் மாணவர்கள் இருக்கும் வகுப்பறைகள், கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமை, பள்ளிகளுக்கு குறைவான நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து போரட்டம் நடத்தி இருக்கின்ற்றனர்.

இதில், ஒரு சில பல்கலைகழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கு அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் போருக்கு பிறகு, பெட்ரோல் விலை உயர்வு, வாழ்க்கை செலவு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளால் கோபமடைந்தவர்கள் மாணவர்களின் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் குறித்து பேச ஆரம்பித்தனர்.

இரண்டு பதவிக் காலங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதால், தொழிற்சங்கங்களும் இடதுசாரி கட்சிகளும் இந்தப் போராட்டங்களை ஒரு பரந்த அதிருப்தி வெளிப்பாட்டின் பகுதியாகப்  பயன்படுத்திக்கொண்டுள்ளன.

வன்முறையாக எப்படி மாறியது?

அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில், வானவேடிக்கை பட்டாசுகளை ஏவ ஆரம்பித்திருக்கின்றனர். அந்த பட்டாசுகளை அவர்கள் பள்ளிகள் உள்ளிட்ட பிற கட்டடங்கள் மீது ஏவி விட்டிருக்கின்றனர். இது, பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 24 பள்ளிகளாவது தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது. பின்னர் கையெறி குண்டுகள் வீசி கலைக்க பார்த்தனர்.

இந்த போராட்டத்தை திசை திருப்பிய குற்றத்திற்காக 34 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவனின் வலது கை அப்படியே பிய்ந்து போனதாக கூறப்படுகிறது. இது, போலீசாரின் குண்டு வீச்சால் நடந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | உலகை உலுக்கும் போராட்டங்கள்.. Gen Z இளைஞர்களின் கோபத்திற்கு என்ன காரணம்? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES