SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிரம்பை விட அதிக சம்பளம் வாங்கும் பிரதமர்.. யார் தெரியுமா? இத்தனை கோடியா?

Singapore PM Highest Salary: அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் பட்டியலில் சிங்கப்பூர் பிரதமர் வோங் முதலிடம் பெற்றுள்ளார். சிங்கப்பூர் பிரதமருக்கு 64 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 09, 2026, 10:34 AM IST | Updated: Sep 09, 2026, 10:48 AM IST
Join

Singapore PM Highest Salary: சிங்கப்பூர் அமைச்சர்களுக்கான சம்பளம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதனால், அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கின் வருமானம் 64 சதவீதம் உயர்கிறது. எனவே, உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர்களின் பட்டியலில் சிங்கப்பூர் பிரதமர் வோங் முதலிடத்தில் உள்ளார்.

அதிகம் சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு அக்டோபர் 15 முதல் 64 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் அவரது ஆண்டு சம்பளம் சிங்கப்பூர் டாலர் 2.2 மில்லியனில் இருந்து 3.6 மில்லயன் டாலராக உயரும். அதாவது, சிங்கப்பூர் பிரதமர் வோங்கின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.16.5 கோடியில் இருந்து சுமார் ரூ.27 கோடி வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை விட 7 மடங்கும் அதிகம் சம்பளம் வாங்குகிறார். பிரதமர் லாரன்ஸ் வோங்கின் சம்பள உயர்வு 2026 அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும். அதன்படி, தற்போது அமெரிக்கா அதிபர் டிரம்ப் ரூ.3.3 கோடி ஆண்டு சம்பளமாக வாங்குகிறார்.  சம்பள உயர்விற்கு முன்பே, சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம், அமெரிக்கா மற்றும் பிற ஜி7 நாடுகள் உட்பட பல தலைவர்களின் ஊதியத்தை விடப் பெருமளவில் அதிகமாக இருந்தது.

சிங்கப்பூரில் இந்த சம்பளம் உயர்வு பிரமருக்கு மட்டுமில்லை. பிரதமர் வோங்கின் அமைச்சரவையில் உள்ள 21 பேருக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.  துணைப் பிரதமரின் ஊதிய உயர்வு சிங்கப்பூர் டாலர் 1.87 மில்லியனிலிருந்து சிங்கப்பூர் டாலர் 3.06 மில்லியனாக அதிகரிக்கும். அதே வேளையில்  அமைச்சர்கள் தங்களின் பணிமூப்பு மற்றும் பொறுப்பின் முக்கியத்துவத்தைப் பொறுத்து சிங்கப்பூர் டாலர் 1.80 மில்லியன் முதல் சிங்கப்பூர் டாலர் 2.88 மில்லியன் வரை சம்பளத்தை பெறுவார்கள் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Explained | நாம் பார்க்கும் உலக வரைபடம் தவறா? ஆப்பிரிக்காவின் உண்மையான அளவு இதுதான்!

அமெரிக்க அதிபரை விட அதிகம்

சிங்கப்பூரில் கடைசியாக 2012ஆம் ஆண்டு அரசியல் தலைவர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, மக்களின் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அமைச்சர்களின் சம்பளம் 36 சதவீதமாக பெருமளயில் குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு முதல் அரசியல் தலைவர்கள் சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  ஆனால், இந்த  பரிந்துரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, ​​15 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 2025-ல் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீனக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சம்பள உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து திறமையாளர்கள் அரசியலுக்கு ஈர்ப்பதற்காகவும், ஊழலற்ற ஆட்சியை தொடர்வதற்கும் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அமைச்சர்களக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அவர், தனது பதவிக்காலத்தில், தனது சம்பள உயர்வு முழுவதையும்  நல்ல காரியங்களுக்கு​​நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக வோங் கூறினார். இதுகுறித்து பிரதமர் வோங்க கூறுகையில், அரசியல் தலைவர்களின் சம்பளம் உணர்ச்சிப்பூர்வமான விஷயம். 

மேலும் படிக்க: நேபாளத்தில் இன்னும் எத்தனை இந்தியர்களை காணவில்லை... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

இந்த தொகை சிங்கப்பூர் மக்கள் சம்பாதிப்பதை விட மிக அதிகம். நல்ல அரசாங்கம் நல்ல தலைமையைச் சார்ந்துள்ளது என்பதே நமது தொடக்கப் புள்ளி. சிங்கப்பூர் கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர்களின் சம்பளத்தை திருத்தியமைத்தது. சமீபத்திய சம்பள உயர்வை ஒரு சுயாதீனக் குழு பரிந்துரைத்தது என்று கூறினார்.

உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் தலைவர்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES