SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Independence Day 2026 Live: செங்கோட்டையில் பிரதமர் உரை; உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து

Independence Day 2026 Live Updates: இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தின் முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Written By Sudharsan G
Published: Aug 15, 2026, 07:22 AM IST | Updated: Aug 15, 2026, 11:22 PM IST
Join

Independence Day 2026 Live Updates: இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் மூலை முடுக்கெங்கும் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து, உரையாற்றினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். முதல்வர் விஜய் முதல்முறையாக கொடியேற்றிவைத்தார்.

 

 

 

 

15 Aug 2026, 5:27 PM

12 நிமிட ரூல்ஸை நீக்கிய மத்திய அரசு..

2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கான மத்திய அரசின் புதிய ரூல்ஸ் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம் (Read More)

15 Aug 2026, 1:20 PM

Independence Day 2026 Live: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சுதந்திர தின விழா நடைபெற்றது. வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற்ற நிலையில், மாநிலத்தின் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

15 Aug 2026, 12:33 PM

Independence Day 2026 Live: பிரதமர் மோடி அறிவித்த 7 திட்டங்கள்!

80வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் இந்தியா வளர்ச்சியடைய 7 திட்டங்களை வகுத்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

15 Aug 2026, 11:41 AM

தகைசால் தமிழர் விருதும், விருது பெற்றவர்களும்...

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது குறித்தும், இதுவரை இவ்விருதை பெற்றவர்கள் குறித்தும் விரிவாக படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

15 Aug 2026, 11:38 AM

முதல்வர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கூறுகையில்:

“இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. அடுத்த சுதந்திர தினத்திற்குள் அந்த இலக்கை அவர் நிறைவேற்றுவார். இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.”

15 Aug 2026, 11:12 AM

காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றினார்

டெல்லி: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில் சிபிபி (CPP) தலைவி சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

15 Aug 2026, 10:40 AM

SBI Clerk Recruitment 2026

SBI Clerk Recruitment 2026: தமிழகத்தில் மட்டும் 1,410 காலியிடங்கள்

வங்கித் துறையில் அரசுப் பணியை விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) நிலையில் 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)

15 Aug 2026, 9:47 AM

CM Vijay Live: மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் உயர்வு

வீரபாண்டியன் கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, மருதுசகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழிதோற்றலுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தினவிழாவில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

15 Aug 2026, 9:45 AM

CM Vijay Live: குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500-ஆக உயர்வு

மாநில அரசால் விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என சென்னையில் நடந்த 80வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

15 Aug 2026, 9:45 AM

CM Vijay Live: மாதாந்திர நிதியுதவி உயர்வு

மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

15 Aug 2026, 9:44 AM

CM Vijay Live: ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு

விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தப்படுவதாக சென்னையில் நடந்த 80வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

15 Aug 2026, 9:43 AM

CM Vijay Live: முதல்வர் விஜய் அறிவிப்பு

முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என 80வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

15 Aug 2026, 9:21 AM

CM Vijay Live Updates : காரில் இருந்து இறங்கிய முதல்வர்...

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா நிறைவடைந்த பிறகு, முதல்வர் விஜய் காரில் ஏறிச்சென்றார். அப்போது வழிநெடுக மக்கள் அவருக்காக நின்றுகொண்டிருந்தனர். உடனே காரில் இருந்து இறங்கி, நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

15 Aug 2026, 9:15 AM

Independence Day 2026 Live Updates: சென்னை சுதந்திர தின விழா நிறைவு

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக கொடியேற்றி, விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு சுதந்திர தின வாழ்த்தையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

15 Aug 2026, 8:55 AM

செங்கோட்டையில் முதல் முறையாக ஒலித்த வந்தே மாதரம்

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு

இந்த ஆண்டு தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டாகும். செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றியபோது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 105 மிமீ 'லைட் ஃபீல்ட் கன்' பீரங்கிகளைக் கொண்டு 1721 ஃபீல்ட் பேட்டரி (சடங்குப் பிரிவு) மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது... (மேலும் படிக்க)

15 Aug 2026, 8:54 AM

CM Vijay Speech Live : ஊழல் ஒழிப்பும் விடுதலையே...

சுதந்திர தினத்தை முன்னிட்டு என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள். லஞ்சம், ஊழலில் இருந்து தமிழ்நாட்டை காப்பதும் விடுதலைக்கு சமமானதுதான்.

15 Aug 2026, 8:50 AM

CM Vijay Speech Live : முதலமைச்சர் விஜய் உரை

நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக கொடியேற்று வைத்து, தற்போது மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

15 Aug 2026, 8:45 AM

CM Vijay Flag Hoisting Live : முதல்முறையாக கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து, கொடி வணக்கம் செலுத்தினார். தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் விஜய்.

15 Aug 2026, 8:42 AM

CM Vijay Flag Hoisting Live : காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட முதல்வர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை, திறந்த ஜீப் வாகனத்தில் சென்று முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். முதல்வர் விஜய்க்கு சிங்கப்பெண் அதிரடிபடை மரியாதை செலுத்தினர்.

15 Aug 2026, 8:38 AM

PM Modi Speech Live: பிரதமர் மோடி உரை

  • நாடு முழுவதும் புதிதாக 5 அணு உலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு துறையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • எரிசக்தி இல்லாமல் நாடு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அணுசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • வரும் 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES