SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News Live Today : தொடரும் சட்டப்பேரவை - மானியக் கோரிக்கை விவாதம்; கனமழை Alert

Tamil News LIVE Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதம் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதம்; தமிழ்நாடு கனமழை எச்சரிக்கை; இந்தியா - இலங்கை டெஸ்ட் 4வது நாள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Written By Sudharsan G
Published: Aug 18, 2026, 09:51 AM IST | Updated: Aug 18, 2026, 05:20 PM IST
Join

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்; நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு, மனிதவள மேலாண்மை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற இருக்கிறது.

கனமழை எச்சரிக்கை: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடி கனமழை பெய்யக்கூடும் என்றும்; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வட கடலோர தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மதிமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

18 Aug 2026, 5:30 PM

வருகையில்லா ஆவணப்பதிவு - பத்திரப்பதிவுத்துறை அப்டேட்

Tamil Nadu Presenceless Registration: வருகையில்லா ஆவணப்பதிவு குறித்து  சேலம் மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். (மேலும் படிக்க)

18 Aug 2026, 4:01 PM

Tamil News Live : மூத்த கால்பந்து வீரர் அருமைநாயகத்திற்கு அர்ஜுனா விருது

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்பகப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழு பரிந்துரையின் பேரில் விருது வழங்கப்பட்டுள்ளது. 1962ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் அருமைநாயகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

18 Aug 2026, 2:48 PM

Tamil Nadu Assembly Live : காமராஜர் பெயரை வைத்தது ஏன்?

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன் என்பதை படிக்க...

18 Aug 2026, 3:35 PM

பிஎம் கிசான் கடைசி வாய்ப்பு

PM Kisan Alert: பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி பெற விவசாய அடையாள எண் அவசியம். விவசாயிகள் விவசாய அடையாள எண் பெற இறுதி வாய்ப்பு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். (மேலும் படிக்க)

18 Aug 2026, 3:35 PM

பிஎம் கிசான் கடைசி வாய்ப்பு

PM Kisan Alert: பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி பெற விவசாய அடையாள எண் அவசியம். விவசாயிகள் விவசாய அடையாள எண் பெற இறுதி வாய்ப்பு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். (மேலும் படிக்க)

18 Aug 2026, 2:09 PM

டொனால்ட் டிரம்ப் ஓமன் எச்சரிக்கை

ஈரான்-அமெரிக்கா போரில் அமைதி தூதராகச் செயல்பட்ட ஓமன் நாட்டிற்கே டொனால்ட் டிரம்ப் குண்டுவீச்சு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் கப்பல் பறிமுதல், வளைகுடா நாடுகளின் பின்னடைவு என மத்திய கிழக்கில் நடப்பது என்ன? முழு விவரங்கள் அறிய.. (மேலும் படிக்க) 

18 Aug 2026, 1:40 PM

தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ்! இலவச சிகிச்சை முதல் காப்பீடு வரை

Tamil Nadu Health Budget 2026: தமிழ்நாடு மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முதல் வீட்டில் சுகப்பிரசவம் பார்ப்பது தட்டணைக்குரிய குற்றம் வரையில் முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது (மேலும் படிக்க)

18 Aug 2026, 1:08 PM

புதுச்சேரி ரேஷன் கார்டு ஆதார் இணைப்பு

புதுச்சேரி ரேஷன் கார்டுதாரர்களே கவனம்! ஆதார் மற்றும் மொபைல் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காவிட்டால் உணவு தானிய மானியம் நிறுத்தப்படலாம். ஆகஸ்ட் 21 கடைசி தேதி. யார் இணைக்க வேண்டும்? புதிய டிஜிட்டல் மானிய முறை என்ன? முழு விவரம் அறிய.. (மேலும் படிக்க)

18 Aug 2026, 12:47 PM

”உங்கள் வேலையை பாருங்கள்” டி.கே.சிவகுமார் அதிரடி!

“மாநிலங்களுக்கு தங்களின் சொந்த பிரச்சனைகள் உண்டு, உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். எந்த மாநிலமும் மற்றொரு மாநில நிர்வாகத்தில் தலையிடக்கூடாது” கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

18 Aug 2026, 11:36 AM

பெங்களூரு பள்ளியில் H1N1 பீதி

H1N1 தொற்று இந்தியாவை பீதியில் ஆழ்த்தி வரும் நிலையில், பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுனில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 பணியாளர்கள் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன... (மேலும் படிக்க)

18 Aug 2026, 11:19 AM

Tamil Nadu Assembly Live : காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்?

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு கேள்வி: முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்?. புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வைக்க வேண்டியதுதானே? அதில் தவறில்லையே?. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் வைக்கலாம் எனக் கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்த பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்திற்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி.

அமைச்சர் ராஜ்மோகன்: கடந்த காலங்களிலும் திட்டங்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் விரிவாக்கம் என்பதால் காமராஜரின் பெயரே காலை உணவுத் திட்டத்திற்கு பொருத்தமானதுதான்.

18 Aug 2026, 10:33 AM

TN Assembly Live Updates: அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர்

தமிழ் உணர்வு குறித்த அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறப்பு தீர்மானத்தை ஒட்டிய அமைச்சர் கூறிய கருத்துகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று சபாநாயகர் அவையில் தெரிவித்துள்ளார். கவன ஈர்ப்பு தீர்மானத்தையொட்டிதான் அனைவரும் பேச வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

18 Aug 2026, 10:18 AM

தஞ்சாவூர் விசிக போராட்டம்

தஞ்சாவூரில் நடந்த மோதலை கலைக்க சென்ற போலீசாருக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இளைஞரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்தது 'குறைந்தபட்ச பல பிரயோகம்' என தஞ்சாவூர் போலீசார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.... (மேலும் படிக்க)

18 Aug 2026, 10:06 AM

TN Assembly Live Updates: 'கர்நாடகாவில் போலியான என்கவுண்டர்'

  • கர்நாடக வனத்துறையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
  • தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஒரு போலியான என்கவுண்டர்.
  • தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும். சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் - சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு.
Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES