SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: பரபரக்கும் இடைத்தேர்தல் களம்; இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

Tamil News LIVE Updates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது; ஆசிய விளையாட்டுத் தொடரின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 03, 2026, 09:20 AM IST | Updated: Oct 03, 2026, 10:45 AM IST
Join

இடைத்தேர்தல் அப்டேட்ஸ்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் (அக். 5) நிறைவடையும். எனவே, இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். மதுராந்தகத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஆசிய விளையாட்டு தொடர்: ஆசிய விளையாட்டு போட்டித்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஆடவர் கிரிக்கெட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

03 Oct 2026, 10:44 AM
Tamil News LIVE: வீடு தேதி வரும் ரேஷன் பொருட்கள்

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அக்டோபர் 3,5ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (மேலும் படிக்க)
 

03 Oct 2026, 10:43 AM
Tamil News LIVE: புகார் எண்ணை அறிவித்த மின்வாரியம்

மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்தடை போன்ற புகார்களை எளிதாக அளிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
 

03 Oct 2026, 10:42 AM
Tamil News LIVE: சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களி இனி சனிக்கிழமை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

03 Oct 2026, 10:20 AM
பதவி விலகும் வரை ஓயமாட்டோம்

முக்கிய அரசியல் பேரணிகள் நடைபெறும் இடமான சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' தலைவர் அபிஜீத் திப்கே, ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் "ஜந்தர் மந்தர் 2.0" போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தார்... (மேலும் படிக்க)

03 Oct 2026, 9:52 AM
Tamil News Live : சென்னையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. 109 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நிலவேம்பு கசாயமும் வழங்கப்படும்.

03 Oct 2026, 9:22 AM
Asian Games 2026 : இந்தியாவுக்கு 16வது தங்கம்

ஆசிய விளையாட்டு தனி நபர் மகளிர் ரிகர்வ் வில் வித்தை போட்டியில் இந்தியாவின் குங்கும் மொஹோத் (17) தங்கம் வென்று சாதனை. தனிநபர் ரிகர்வ் இறுதிப்போட்டியில் கொரியாவின் ஓ யேஜினை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் மொஹோத்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES