• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இடைத்தேர்தல்: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை... புதுச்சேரியில் அறிவிப்பு

இடைத்தேர்தல்: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை... புதுச்சேரியில் அறிவிப்பு

Written BySudharsan G
Published: Oct 03, 2026, 01:10 PM IST|Updated: Oct 03, 2026, 01:22 PM IST
joinshare
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளுக்கும்; புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Puducherry Holiday1/5

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டு வென்றார். மங்கலம் தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பொறுப்பை ரங்கசாமி ராஜினாமா செய்ததை ஒட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
Puducherry Holiday2/5

இரண்டு நாட்கள் விடுமுறை

வரும் அக்டோபர் 6ஆம் தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவும், அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு பணிகளை மேற்கொள்வதற்காக அக்டோபர் 5 (திங்கள்), அக்டோபர் 6 (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Puducherry Holiday3/5

வகுப்புகள் நடத்த தடை

இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளில் எவ்வித வகுப்புகளோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ அல்லது பிற செயல்பாடுகளோ நடத்தப்படக்கூடாது என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Puducherry Holiday4/5

தேர்தல் பணிகளுக்கு பள்ளி வளாகம்

தேவையான தேர்தல் ஏற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக தேர்தல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Puducherry Holiday5/5

அதிகாரப்பூர்வ உத்தரவு

தேர்தல் அமைதியாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய இந்த வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் டி. மோகன்குமார் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
TAGS:
Election

Trending

  • News
  • Photos
  • Videos
உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

2

Explainer: சிலிக்கான் வேலியை அதிர வைத்த ரகசிய ‘Me Too' ஆவணம்! பெண்களுக்கு இடையில் விஸ்பர் நெட்வொர்க்!

3

மதுராந்தகம், தாராபுரம்: நாளை மாலை முதல் அமலுக்கு வரும் விதிகள் என்னென்ன?

4

திருச்சி : ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு

5

இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.