• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... எப்படி விண்ணபிப்பது?

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... எப்படி விண்ணபிப்பது?

Dindigul District Recruitment News: திண்டுக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் பணிபுரிந்திட கீழ்க்கண்ட 2 பதவிகளுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Written BySripriya Sambathkumar
Published: Oct 03, 2026, 01:22 PM IST|Updated: Oct 03, 2026, 01:31 PM IST
joinshare
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... எப்படி விண்ணபிப்பது?
Image Credit: Representative / Dindigul District Recruitment News

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

2

ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

3

ஆன்லைன் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த மாற்றம்! தமிழ்நாடு அரசின் அப்டேட்

4

Asian Games 2026: கிரிக்கெட்டில் 2வது தங்கம்; இந்திய ஆடவர் அணி மிரட்டல் - பாகிஸ்தான் படுதோல்வி

5

பக்தர்களே அலர்ட்! கோவை பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Dindigul District Recruitment News: திண்டுக்கல் மாவட்டம், குழந்தைகள் நலம் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் இளைஞர் நீதிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு

திண்டுக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் பணிபுரிந்திட கீழ்க்கண்ட 2 பதவிகளுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற விதி 2015ன் அடிப்படையில் கல்வித்தகுதியும், மிஷன் வத்சால்யா வழிகாட்டுதலின் அடிப்படையில் வயது வரம்பும், ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காலிப்பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, தொகுப்பூதிய ஆகியவற்றின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

1. உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர்: Junior Assistant cum Record Clerk

பதவி: உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
தொகுப்பூதியம்: மாதம் ரூ.20,000
கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்: Office Assistant

பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
தொகுப்பூதியம்: மாதம் ரூ.13,000
கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு (VIII) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | டிகிரி இருக்கா? உச்ச நீதிமன்றத்தில் வேலை ரெடியா இருக்கு: எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய குறிப்பு

  • விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.dindigul.nic.in -இலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயதுக்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை இணைக்க வேண்டும்,
  • இப்பதவிகளுக்கு தகுதியுள்ள நபர்கள், பூர்த்து செய்யப்பட்ட விண்ணப்பம், சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றை விளம்பரம் வெளியிடப்பட்ட 15 வேலை நாட்களுக்குள் (12.10.2026 மாலை 05.30 மணிக்குள்) கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
  • இக்காலிப்பணியிடம் முற்றிலும் தற்காலிகப் பணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • மேற்காணும் பணியிடத்திற்கு எதிர்காலத்தில் நீதிமன்றத்திலோ அல்லது வேறு அமைப்பிலோ நிரந்தர உரிமை கோரிட இயலாது.
  • தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம்,
பிளசிங்ஸ்,
பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி),
எஸ்.பி.ஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்),
திண்டுக்கல்-624 004

தொலைபேசி எண்: 0451 - 2904070

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் வேலை: பல்வேறு காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu