Tamil News Live : மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் அக்டோபர் 13 அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. குடிநீர், பாதாளச் சாக்கடை, சொத்து வரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். (மேலும் படிக்க)
தமிழகத்திற்கு ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்யும் வரை போரட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி லக்னோவில் மாலை தொடங்க இருக்கிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் அக்டோபர் 13 அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. குடிநீர், பாதாளச் சாக்கடை, சொத்து வரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். (மேலும் படிக்க)
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4- மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். (மேலும் படிக்க)
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தரும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடக்கம், 5 ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் காரைக்கால்–பேரளம் ரயில் வழித்தடச் சேவை உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் கவனம் பெறுகின்றன. (மேலும் படிக்க)