SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வந்தே பாரத் வேகத்தில் சீறிய வைகை எக்ஸ்பிரஸ்; 430 km தூரம்... வெறும் 5.30 மணிநேரம்...

செங்கல்பட்டு டூ மதுரை வரை உள்ள 430 கி.மீ., தூரத்தை வெறும் 5 மணிநேரம் 30 நிமிடங்களில் வைகை ரயில் கடந்துள்ளது. அதாவது வந்தே பாரத்தின் வேகத்திற்கு இணையாக வைகை ரயில் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Written By Sudharsan G
Published: Oct 29, 2026, 08:35 PM IST | Updated: Oct 29, 2026, 08:40 PM IST
Join

Vaigai Superfast Express Speed Record: தென் மாவட்டமான மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கிய தினசரி ரயில்களில் ஒன்று, வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும். 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து, அதாவது நாட்டின் 30வது சுதந்திர தினத்தில் இருந்து இந்த வைகை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வே வரலாற்றிலும் முக்கிய இடத்தையும் வைகை ரயில் பிடித்துள்ளது. மீட்டர்-கேஜ் ரயில்களில் முதல்முறையாக மணிக்கு 100 கி.மீ., வேகத்தில பயணித்த ரயில் இதுவாகும். அதேபோல் முன்பெல்லாம் இரவு நேர ரயில்களில் மட்டும் சமையலறை பெட்டிகள் (Pantry Car) இருந்து வந்தன. ஆனால், முதல் மீட்டர்-கேஜ் ரயிலாக வைகையில்தான் சமையலறை பெட்டி கொண்டுவரப்பட்டது.

மேலும் படிக்க | நெருங்கும் தீபாவளி! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது? குஷியில் தென் மாவட்ட பயணிகள்

50வது ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் குதிரை

1994ஆம் ஆண்டில் முதல்முறையாக ஒரு மீட்டர்-கேஜ் ரயிலில் 42 பேர் அமரக்கூடிய ஏசி வசதி கொண்ட ரயில் பெட்டியும் வைகை ரயிலில்தான் கொண்டுவரப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அதிநவீன LHB பெட்டிகள் கொண்ட ரயில்களை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.

முதலில் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில்தான் இந்த பெட்டிகள் கொண்டுவரப்பட்டன. அதற்கு முன் சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் மட்டுமே இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 49வது ஆண்டை நிறைவுசெய்து, 50ஆம் ஆண்டில் இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வைகை ரயில் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அரைமணிநேரம் தாமதம்

வழக்கமாக, சென்னை டூ மதுரை, மதுரை டூ சென்னை இரு வழித்தடங்களிலும் வைகை ரயிலின் பயண நேரம் என்பது 7 மணிநேரம் 20 நிமிடங்கள் ஆகும். ஆனால், வழக்கத்தை விட வைகை ரயில் அதிவேகமாக சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளது.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அன்று (சனி) சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை ரயில், 10 நிமிடம் தாமதமாக மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் அருகே பராமரிப்பு பணி நடைபெற்றதால் சுமார் 20 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க | இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

430 கி.மீ., வெறும் 5.30 மணிநேரம்...

அதாவது, செங்கல்பட்டு - மதுரை இடையேயான 430 கி.மீ., தூரத்தை வைகை ரயில் சுமார் 5 மணிநேரம் 30  நிமிடங்களில் கடந்துள்ளது. அதாவது, வந்தே பாரத்தின் வேகத்திற்கு இணையாக வைகை ரயிலும் சென்றிருக்கிறது. மேலும், வைகை ரயில் அதன் பயணத்தில் பெரும்பாலான நேரம் மணிக்கு 110 கி.மீ., வேகத்திலேயே சென்றிருக்கிறது.

ரயிலில் பயணித்த பயணிகளின் தகவலின்படி, அன்றைய தினம் (அக். 24) தாம்பரத்திற்கு மதியம் 2.25 மணிக்கு வந்த வைகை ரயில்,  அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மதியம் 2.58 மணிக்கு அடைந்துள்ளது.

தாமதத்தை சீர்செய்த பணியாளர்கள்

செங்கல்பட்டு டூ விழுப்புரம் இடையேயான 103 கி.மீ., தூரத்தை வெறும் 1 மணிநேரம் நிமிடங்களில் இந்த ரயில் கடந்துள்ளது. மதுரைக்கு அருகில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் அங்கு மட்டும் வேகம் குறைக்கப்பட்டிருக்கிறது, பெரும்பாலான பகுதிகளை மணிக்கு 110 கி.மீ., வேகத்தில்தான் வைகை ரயில் கடந்திருக்கிறது.

வழக்கமாக மதியம் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மதுரைக்கு இரவு 8.35 மணிக்கு வந்து சேரும் வைகை ரயில், அன்றைய தினம் 8.37 மணிக்கு வந்தடைந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே அரைமணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இத்தனை தடங்கள் ஏற்பட்டாலும் ரயில் பணியாளர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் தாமதம் சீர்செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத்திற்கு இணையாக...

செங்கல்பட்டு - மதுரை இடையே அதிவேகத்தில் பயணத்தில் வெறும் 5 மணிநேரம் 35 நிமிடத்தில் கடந்துள்ளது. அதாவது வைகை ரயில் வந்தே பாரத் ரயிலுக்கு நிகராக பயணித்துள்ளது. வழக்கமாக, வைகை ரயில் இந்த தூரத்தை 6 மணிநேரம் 20 நிமிடத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மதுரையில் இந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்... பார்களும் செயல்படாது

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES