Diwali Special Trains Latest: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பபடுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்குவார்கள். இதனால், ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை, நாகர்கோவில், கோவை போத்தனூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 28) துவங்கியது. மேலும், சென்னையில் இருந்து நாகர்கோவில், போத்தனூர் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 29) துவங்குகிறது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (நவம்பர் 7) மதியம் 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 9ஆம் தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில், நவம்பர் 10ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நவம்பர் 6ஆம் தேதி சென்ட்ரல் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இருந்த ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவை போத்தனூரில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Madurai – Tambaram One Way Superfast Express Special (06188) to clear the extra rush. Advance booking opens at 08:00 hrs on 29 October 2026 #SouthernRailway #TrainOnDemand https://t.co/ThSHfn7wkW
— Southern Railway (@GMSRailway) October 27, 2026
மதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் (06188) நவம்பர் 1ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் (நவம்பர் 2) காலை 4.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. மதுரையில் இருந்து புறப்படும், இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரயிலில் 1 ஏசி முதல் வகுப்பு பெட்டி, 2 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 3 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், ஒரு சாதாரண ஸ்லீப்பர் வகுப்புகள், 4 பொது பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.