SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கிராமங்களை குறி வைத்து... ஆன்லைன் டிரேடிங் மோசடி... மதுரையை அதிரவைத்த சம்பவம்

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், அடுத்தடுத்த மாதங்களில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து ரூ.150 கோடி வரை பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் பணம் வராததை தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டின் வீட்டை முற்றுகையிட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Written By Sudharsan G
Published: Aug 29, 2026, 11:29 AM IST | Updated: Aug 29, 2026, 11:38 AM IST
Join

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி கிராமத்தில் FQL மற்றும் VG ஆன்லைன் டிரேடிங்கில் முகவராக செயல்பட்ட கார்த்திக் என்பவரது வீட்டை பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 28) முற்றுகையிட்டனர். 

வேப்பரப்பு என்ற பகுதியில் ரஞ்சித் மற்றும் அருண் ஆகியவரது வீட்டை நேற்று முன்தினம் (ஆக. 27) வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். மக்கள் இந்தளவிற்கு கொதிப்படைய என்ன காரணம் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

மதுரையில் நடந்தது என்ன?

மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களான மேலூர், ஒத்தக்கடை, வேப்படைப்பு, கோட்டநத்தம்பட்டி,  மேலவளவு, கிடாரிப்பட்டி, வல்லாளப்பட்டி, கல்லம்பட்டி, சத்தியபுரம், சாலக்கிப்பட்டி, எட்டிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் இரண்டு மாதத்தில் முழு தொகையும் வழங்கப்பட்டது.

ஏஜெண்ட் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

அடுத்தடுத்த மாதங்களில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என FQL டிரேடிங் மற்றும் VG டிரேடிங் என இரண்டு குழுக்களில் பணத்தை பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதற்கு மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் முகவராக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதில் முதலீடு செய்த சிலருக்கு அடுத்த இரண்டு மாதங்களில் பணம் முறையாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பணம் கட்டிய நபர்களுக்கு பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிரது. இதனால் பணம் கட்டி ஏமாந்த பலர் கார்த்திக் வீட்டை முற்றுகையிட்டு தங்களின் பணத்தை கொடுக்கும்படி வலியுறுத்தினர்.

போலீசார் அளித்த வாக்குறுதி

சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ஆறு நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். எனவே, முற்றுகையிட்ட அனைவரும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கைது செய்யப்பட்ட 6 பேரும் கல்லாணை(43),  கல்லாணை(56), புஷ்பம்(45), பஞ்சு(45), ஆனந்தி(23), ராஜலட்சுமி (42)  என போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர்.

புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு

இதனிடையே ஆன்லைன் வர்த்தகத்தில் பல லட்சங்களை முதலீடு செய்து ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் அவர்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் குறிப்பிட்ட அந்த ஐடி நம்பரை வைத்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுக்கள் மேலூர் மற்றும் கோட்டநத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல்துறை மூலமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கிராமங்களே டார்கெட்

மதுரையை சுற்றி உள்ள இந்த கிராமங்களை மட்டுமே இந்த மோசடிக்காரர்கள் டார்கெட் செய்துள்ளனர். இங்கிருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள், குடும்பத்தலைவிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட் கிராமவாசிகளிடம் வெறும் 45 நாள்கள் முதல் 2 மாதங்களுக்குள் நீங்கள் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

போலியான செயலி

இவர்களே வடிவமைத்த செயலிகளின் லிங்க் அல்லது APK Files ஆகியவற்றில் போலியாக லாபம் ஈட்டியதாக காட்டி மக்களை நம்ப வைத்துள்ளனர். இது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. திடீரென செயலிகள் முற்றிலும் வேலை செய்யாதபோதுதான் சந்தேகம் கிழம்பி உள்ளது.

ரூ.150 கோடி வரை இழப்பு

சுமார் 8 ஆயிரம் பேர் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை என மொத்தமாக ரூ.150 கோடி வரை மக்கள் தங்களின் பணத்தை இழந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

இதுவரை புரோக்கர்கள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் என 12 பேரை கைது செய்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ரஞ்சித் என்பவரின் பாஸ்போர்டை முடக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES