• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /நகைக்கடை கொள்ளை வழக்கு..தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது! சிக்கியது எப்படி?

நகைக்கடை கொள்ளை வழக்கு..தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது! சிக்கியது எப்படி?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்த் கைது செய்யபப்ட்டார். ஏற்கனவே அவரது தோழி மீனாட்சி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரும் சிக்கியிருக்கிறார்.

Written ByYuvashree M
Published: Nov 16, 2026, 10:33 IST|Updated: Nov 16, 2026, 11:19 IST
joinshare
நகைக்கடை கொள்ளை வழக்கு..தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது! சிக்கியது எப்படி?
Image Credit: Nishanth Arrested | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

2

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

3

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

5

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில், 500 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம், தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிஷாந்த், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நிஷாந்த் கைது!

யூடியூபரான நிஷாந்த், தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் பல நாட்களாக தேடப்பட்டு வந்தார். இதையடுத்து, தர்மபுரியில் உள்ள சேசம்பட்டியில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சேசம்பட்டி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பிறகு இருசக்கர வாகனம், கார், பேருந்து உள்ளிட்டவற்றின் மூலம் தப்பிச்சென்ற நிஷாந்த், ஆம்னி பேருந்தில் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அப்போது, அந்த பேருந்து ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்படவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், போலீசார் நிஷாந்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதற்கு முன்னரும் இவரை பிடிக்க போலீசார் அவர் எங்கெங்கு செல்கிறார் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை நடந்தது எப்படி?

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் தனிஷ்க் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு சமயத்தில் 15 கிலோ தங்க நகைகளை ஒரு மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது, அவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவர் கையில் குத்தியிருந்த டாட்டூவை வைத்து அவரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த திருட்டு சம்பவத்தில் நிஷாந்துடன் அவருடைய தோழியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி என்பவருக்கும், மீனாட்சியின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

மேலும் படிக்க | தடயமே இல்லாமல் திருடியது எப்படி? மீனாட்சி சிக்கியது எப்படி? காவல்துறை போட்ட வீடியோ

சிக்கிய இன்ஸ்டா இன்ஃப்ளுவன்ஸர்!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவன்சரான மீனாட்சி, டெக் வீடியோக்கள் போடுவது, கடைகளுக்கு ப்ரமோஷன் செய்வது என்றிருப்பார். இவருடன் பழகிய நிஷாந்தும் யூடியூப் வ்லாகராக இருக்கிறார். நிஷாந்துடன் தொடர்புடைய இவரிடம் விசாரித்த போது, மீனாட்சியுடன் சேர்ந்து நிஷாந்த் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. நிஷாந்தின் செல்போன் விவரங்களை வைத்து மீனாட்சிக்கும் இதில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை நிஷாந்த் மீனாட்சியிடம் கொடுத்து சென்றதாகவும், அதனை ஒரு நிலத்தில் அவர் பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது. பதுக்கி வைத்த இடத்தை காண்பித்த மீனாட்சியையும், நிஷாந்தின் தந்தையையும் கைது செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்களை வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டு திருட்டு..!

நிஷாந்த், தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக இரு நாட்கள் இதற்காக ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிரது. நிஷாந்த், இதற்கு முன்னதாகவே நகைகளை அணிந்து காட்டி, ப்ரமோஷனுக்காக தன் சேனலில் வீடியோ எடுத்து போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளை நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே, பக்கத்து மாடி கட்டடத்தில் இருந்து தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடைக்கு தாவிய நிஷாந்த், இரும்பு சாரம் வழியாக சென்று, லிஃப்ட் அருகே அமைக்கப்பட்டிருந்த அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றி உள்ளே சென்று நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இப்படி செய்ததற்கு அடுத்த நாள், அவர் அதிகாலை இதே முயற்சியை செய்துள்ளார். அதன் பின்னர்தான் தன் திட்டத்தை அரங்கேற்றி நகைகளை கொள்ளையடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: நிஷாந்த் கைவரிசை காட்டியது எப்படி? ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime