• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /Tanishq: 3 முறை மாறுவேடத்தில் வந்த இளைஞர்.. மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்!

Tanishq: 3 முறை மாறுவேடத்தில் வந்த இளைஞர்.. மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்!

Madurai Tanishq Robbery: மதுரை பழங்காநத்தம் தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மாறுவேடத்தில் கடைக்கு வந்து நோட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் பட்டதாரி இளைஞரின் வீட்டில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written ByR Balaji
Published: Nov 14, 2026, 08:49 AM IST|Updated: Nov 14, 2026, 08:53 AM IST
joinshare
Tanishq: 3 முறை மாறுவேடத்தில் வந்த இளைஞர்.. மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தமிழகம், புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர், இமாச்சலத்தில் கனமழை!! IMD வானிலை முன்னறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர், இமாச்சலத்தில் கனமழை!! IMD வானிலை முன்னறிவிப்பு

2

Tanishq: 3 முறை மாறுவேடத்தில் வந்த இளைஞர்.. மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்!

3

சிறப்பு TET தேர்வு 2026: விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

4

IPL 2027: மீண்டும் அணி மாறும் முகமது ஷமி.. LSG போடும் பலே கணக்கு! அதிரடி ஆல்ரவுண்டரை தூக்க திட்டம்!

5

ஐபிஎல் ஏலத்திற்கு முன் இளம் வீரர்களுக்கு மெகா வாய்ப்பு - இன்று தொடங்கும் SMAT தொடர்... முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் இரவு முழுவதும் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் நேரில் சென்று விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 கிலோ தங்க நகைகள் கொள்ளை

மதுரை பழங்காநத்தம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த வியாழக்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து சுமார் 15 கிலோ தங்க நகைகளை திருடி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ். நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த கொள்ளையிலொரே ஒருவர் மட்டுமே ஈடுபட்டது தெரியவந்தது. கடை திறக்கப்பட்டு 15 நாட்களே ஆகியிருந்த நிலையில், அங்கு இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

இரும்பு சாரம் வழியாக கடைக்குள் நுழைந்த கொள்ளையன்

கடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரத்தை பயன்படுத்தி கொள்ளையன் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தரைத்தளத்திற்கு இறங்கி, லிப்ட்டில் இருந்த கம்பிகளை பிடித்துக்கொண்டு முதல் தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்ளையனை பிடிப்பதற்காக போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையன் ஸ்கூட்டியில் வந்ததும் கண்காணிப்பு கேம்ரா பதிவுகள் மூலம் தெரியவந்ததால், அந்த வாகனத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பழங்காநத்தத்தில் விடிய விடிய சோதனை

இந்த நிலையில், பழங்காநத்தத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் கிருஷ்ணா என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டில் இரவு முழுவதும் சோதனை நடத்திய போலீசார், லேப்டாப் மற்றும் போலி துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

துணை ஆணையர் நேரில் விசாரணை

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன், நிஷாந்த் கிருஷ்ணாவின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மாடக்குளம் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கண்மாய்கள், கோபாலி மலை சுற்றுவட்டாரப் பகுதிகள், வயல்வெளிகள், தோப்புகள் மற்றும் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் நகைகளைத் தேடி வருகின்றனர்.

பல்வேறு வேடங்களில் நகைக்கடைக்கு வந்த இளைஞர்?

போலீசாரின் விசாரணையில், நிஷாந்த் கிருஷ்ணா கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற நகைக்கடைக்கு ஏற்கெனவே பலமுறை வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரே நாளில் மூன்று முறை கடைக்கு வந்த அவர், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தோற்றத்தில் வந்து கடையை நோட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு முறை முகக்கவசம் அணிந்தும், மற்றொரு முறை கையில் கட்டுப் போட்டபடியும் வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை அவர் அந்த நகைக்கடைக்கு ஐந்து முறை வந்திருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் முகம் அடையாளம் தெரியாத வகையில் மாறுவேடத்தில் வந்ததாக கூறப்படும் நிலையில், கொள்ளையன் பயன்படுத்திய ஸ்கூட்டி வாகனம் சிக்கினால் விசாரணையில் மேலும் முக்கிய தடயங்கள் கிடைக்கும் என போலீசார் நம்புகின்றனர். 15 கிலோ தங்க நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime