Syed Mushtaq Ali Trophy 2026-27, Explained: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்படும் சையத் முஷ்டாக் அலி கோப்பை, நாட்டின் முக்கியமான உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடராகும்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடருக்குள் நுழைய உள்நாட்டு வீரர்களுக்கு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்தான் முதல்படியாகும். SMAT தொடரில், அனுபவ வீரர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் அணிகளின் கண்களில் தென்படுவார்கள் என்பதால் இத்தொடர் இளம் வீரர்களுக்கு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், 2026 சீசனில் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் குறித்த முழு விவரத்தையும் இங்கு விரிவாக காணலாம்.
🎥 Reliving the winning moment that gave Jharkhand their maiden Syed Mushtaq Ali Trophy glory last season🏆 Tomorrow, the action returns for #SMAT 2026-27 ⏳ @mflone_ https://t.co/Xmh1crPC11
— BCCI Domestic (@BCCIdomestic) November 13, 2026
Get ready for a truly exciting few weeks of domestic T20 action 👌 #SMAT 2026-27 𝗦𝗧𝗔𝗥𝗧𝗦 𝗧𝗢𝗠𝗢𝗥𝗥𝗢𝗪! 🙌 @mflone_ https://t.co/8J3GAetWM1
— BCCI Domestic (@BCCIdomestic) November 13, 2026
| ஏ பிரிவு | பி பிரிவு | சி பிரிவு | டி பிரிவு | பிளேட் அணிகள் |
| பரோடா | பிகார் | ஆந்திர பிரதேசம் | சத்தீஸ்கர் | அருணாச்சல் பிரதேசம் |
| பெங்கால் | டெல்லி | அசாம் | கோவா | மணிப்பூர் |
| சண்டிகர் | ஹரியானா | ஹிமாச்சல் பிரதேசம் | குஜராத் | மேகாலயா |
| ஜார்க்கண்ட் | ஜம்மு காஷ்மீர் | கேரளா | ஹைதராபாத் | நாகாலாந்து |
| கர்நாடகா | பஞ்சாப் | மத்திய பிரதேசம் | மும்பை | சர்வீசஸ் |
| மிசோரம் | ரயில்வேஸ் | மகாராஷ்டிரா | ஒடிசா | சிக்கிம் |
| ராஜஸ்தான் | தமிழ்நாடு | பாண்டிச்சேரி | உத்தரகாண்ட் | |
| உத்தர பிரதேசம் | சௌராஷ்டிரா | திரிபுரா | விதர்பா |
எலைட் குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் மும்பை, இந்தூர், மொஹாலி, நியூ சண்டிகர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். நாகாலாந்தின் சோவிமா நகரில் பிளேட் குரூப் போட்டிகள் நடைபெறும்.
A range of interesting contests to look forward to 🤩 Here are the matches you can tune in to on Day 1 of #SMAT 2026-27 📺 💻 @mflone_ https://t.co/xX6y68C6zK
— BCCI Domestic (@BCCIdomestic) November 13, 2026
துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், நாராயண் ஜெகதீசன், பி. சச்சின், ஆண்ட்ரே சித்தார்த், ரித்திக் ஈஸ்வரன், ஷாருக் கான், சாய் கிஷோர் (கேப்டன்), சன்னி சந்து, ஆர். ராஜ்குமார், குர்ஜப்னீத் சிங், ஜி. கிஷூர், எம். சித்தார்த், வருண் சக்கரவர்த்தி, அதிசயராஜ் டேவிட்சன், சிலம்பரசன்
*நடராஜன் முதற்கட்ட ஸ்குவாடில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதில் சிலம்பரசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
போட்டி நடைபெறும் தினத்தன்று, எலைட் குரூப் போட்டிகள் காலை 9, காலை 11, மதியம் 1.30, மாலை 4.30 என நடைபெறும்.
தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க்
ஓடிடி: ஜியோ நெட்வோர்க்
ஐபிஎல் அணிகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி தங்களின் வீரர்களை தக்கவைக்க கடைசி நாளாகும். முதல் சுற்று போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதியும், 2வது சுற்று போட்டிகள் நவம்பர் 16ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. எனவே, இளம் வீரர்களுக்கு முதலிரண்டு சுற்று போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
அதேநேரத்தில், டிசம்பர் 16ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறும் என்பதால் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என எண்ணுவார்கள். எனவே இந்த தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.