மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்.. கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எங்கு, எப்போது?
Madurai Special Trains: மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை - கூடல் நகர், ராமேஸ்வரம் - பழனி, பழனி - ராமேஸ்வரம், போடிநாயக்கனூர் - கூடல் நகர், கூடல் நகர் - போடிநாயக்கனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Madurai Special Trains: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (செப்டம்பர் 11) நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே, சென்னை - மதுரை, சென்னை - போடிநாயக்கனூர் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்தநிலையில், தற்போது பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நெல்லை - கூடல் நகர், ராமேஸ்வரம் - பழனி, பழனி - ராமேஸ்வரம், போடிநாயக்கனூர் - கூடல் நகர், கூடல் நகர் - போடிநாயக்கனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: மதுரை: நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
திருநெல்வேலி - கூடல் நகர் சிறப்பு ரயில்
திருநெல்வேலி - கூடல் நகர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 1 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்ப்டடு, மாலை 5.35 மணிக்கு மதுரைக்கு சென்றடைகிறது. கூடல் நகருக்கு 6.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக கூடல் நகர் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி கூடுல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு, மதுரை ரயில் நிலையத்திற்கு 12.30 மணிக்கு சென்றடைகிறது. மதுரையில் இருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில் மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி, விருதுநகர், திருதங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காச, பாவூச்சத்திரம், அம்பாசமூத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: செப்.16,17 தேர்வுகள் ரத்து.. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்.. அலர்ட் மாணவர்கேள!
ராமேஸ்வரம் - பழனி சிறப்பு ரயில்
ராமேஸ்வரம் - பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 16ஆம் தேதியான இன்று மாலை 4.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, பழனிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் மதுரைக்கு 7.45 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி பழனியில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, ராமேஸ்வரத்திற்கு 8.10 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் மதுரைக்கு மாலை 4.25 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, திருப்புவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல், திண்டுக்கல், அக்காரப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
போடிநாயக்கனூர் - கூடல் நகர்
போடிநாயக்கனூர் - கூடல் நகர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. போடிநாயக்கனூரில் இருந்து செப்டம்பர் 17ஆம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, கூடல் நகருக்கு 1.30 மணிக்கு சென்றடைகிறது. மதுரைக்கு மதியம் 12.45 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம்தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, போடிநாயக்கனூருக்கு மாலை 4.30 மணிக்கு சென்றடைகிறது. மதுரைக்கு 2.45 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் தேனி, ஆடிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரைக்கு சென்றடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - மதுரை மெமு ரயில்
செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து மெமு ரயில் புறப்பட்டு, மதுரைக்கு இரவு 2.20 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி மதுரையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு 11.45 மணிக்கு தாம்பரத்திற்கு சென்றடைகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.