SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தடை வேணும்... CM விஜய்யின் நெக்ஸ்ட் மூவ் - நாளை விசாரணை?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அந்த இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 22, 2026, 14:36 IST | Updated: Nov 22, 2026, 14:47 IST
Image Credit: Thiruparankundram Case, CM Vijay | Image Source : X
Join

கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக ஓரிடத்தில் தீபம் ஏற்றப்படும். அதோடு, சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தூணிலும் ஒவ்வொரு ஆண்டும் விளக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை

வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 6 வாரக்காலம் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

ஆனால், அதேநேரத்தில் ஒரு நாள் மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய தூணில் வரும் நவ. 24ஆம் தேதி கார்த்திகை தீபம் அன்று இந்த ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.

விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

முழுமையான விசாரணைக்கு பின்னர் முதன்மை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. எனவே, சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றுவதை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக்கு சில வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு வலதுசாரிகளிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் நேற்று (நவ. 21) தெரிவித்திருந்தார்.

மறு சீராய்வு மனு தாக்கல்

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. வரும் நவ. 24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)  கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நாளை (நவ. 23) காலை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முறையிடத் திட்டமிட்டுள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டதின் விவரம்

இதனால், நாளை உச்சநீதிமன்றம் இந்த முறையீட்டை ஏற்று அவசர விசாரணைக்கு அனுமதி அளிக்குமா? ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசின் மறு சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அவை சுருக்கமாக:

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES