தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர், சில தினங்களுக்கு முன்னதாக மலையாளத்தில் ஒரு சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அப்போது, தான் narcissistic abuseஆல் பாதிக்கப்பட்டதாகவும், 2 வருடங்கள் அதில் இருந்து கஷ்டப்பட்ட பிறகு இப்போது அதிலிருந்து வெளியே வந்தது குறித்து பேசியிருந்தார்.
அனுபமாவும் துருவ் விக்ரமும் ‘பைசன்’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்வது போன்ற ஒரு புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது. இதையடுத்து, இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இது குறித்து இருவருமே அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
சில வாரங்களுக்கு முன்பாக, நடிகை அனுபமா ஒரு பதிவை வெளியிட்டார். அதில் எதற்கும் இனி யாரிடமும் பர்மிஷன் கேட்க தேவையில்லை என்றும், அமைதியையே விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அனுபமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலிளித்த அனுபமா, தான் 2 வருடமாக narcissistic abuseஆல் பாதிக்கப்பட்டதாகவும், தான் உடுத்திய உடையிலிருந்து, தான் பதிவிடும் சமூக வலைதள போட்டோக்கள் வரை அனைத்து விஷயத்திலும் தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தனக்கு அந்த நபருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததாகவும், அதை தான் நிறுத்தியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, இணையத்தில் அனுபமாவின் பேச்சு விவாதப்பொருள் ஆனது.
அனுபமா பேசியதை வைத்து, பலர் அந்த நபர் துருவ் விக்ரம்தான் என்று முடிவே செய்து விட்டனர். இதையடுத்து, தற்போது துருவ் நீண்ட நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
துருவ் விக்ரம், தான் கடந்த சில நாட்களாக எதிர்கொண்டு வரும் பொதுவெளி விமர்சனங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார். இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிறர் கொடுக்கும் கவனத்தை, எவ்வாறு கையாள்கிறார் என துருவ் விக்ரம் பேசினார்.
"பொது வெளியில் தன்னைப்பற்றி பிறர் பேசுவது தன்னை பாதித்ததில்லை என்று சொல்லமுடியாது" என அவர் கூறியுள்ளார்.
நடிகர்கள், திரைத்துறைக்கு வரும் போது அவர்களுடைய திரைப்பட பணிகள் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பொது வெளியில் அதிகமாக பேசப்படும் எனக் கூறிய அவர், "சமூக வலைதளங்களில், நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பான தகவல்கள் மிகவும் வேகமாக பரவுகின்றன" எனவும் கூறியிருக்கிறார்.
ஒரு "தகவல் உண்மையா இல்லையா" என ஆராயாமல், கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக கூறிய துருவ், இதனால் திரைத்துறைய சேர்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பதாக கூறினார்.
தன்னை சுற்றி இருக்கும் நல்ல நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குறித்து பேசிய துருவ் விக்ரம், கடந்த 7-8 ஆண்டுகளாக தனக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் சிறிய நட்பு கூட்டம் இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார். மேலும் திரைத்துற்றையில் தோல்வி, வெற்றி, விமர்சனம், பாராட்டு என பல்வேறு சூழல்கள் வந்தாலும் நம்மை உண்மையாக புரிந்து கொள்பவர்கள் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என தெரிவித்தார்.