• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஜெயிலர் 2 படத்தில் ஸ்ரேயாவா? வெளியான போட்டோ..மீண்டும் வாஜி வாஜி கூட்டணி?

ஜெயிலர் 2 படத்தில் ஸ்ரேயாவா? வெளியான போட்டோ..மீண்டும் வாஜி வாஜி கூட்டணி?

Actress Shriya : சமீபத்தில், நடிகை ஸ்ரேயா ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கிறார். இதைய்யடுத்து இவர்கள் இருவரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்களே என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Written ByYuvashree M
Published: Aug 25, 2026, 12:23 IST|Updated: Aug 25, 2026, 13:29 IST
joinshare
ஜெயிலர் 2 படத்தில் ஸ்ரேயாவா? வெளியான போட்டோ..மீண்டும் வாஜி வாஜி கூட்டணி?
Image Credit: Shriya Rajinikanth | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Actress Shriya : தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவராக இருந்தவர், ஸ்ரேயா. தனக்கு திருமணாகி, குழந்தை பிறந்த பிறகு திரையுலகில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார். இதையடுத்து சமீபத்தில் அவர் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரேயாவின் படங்கள்:

வட இந்தியாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்து, இங்கிருக்கும் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொய்த நடிகைகளுள் ஒருவர், ஸ்ரேயா. இவர், அறிமுகமானது தெலுங்கு படங்கள் மூலமாகத்தான் என்றாலும் தமிழில்தான் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தமிழில் ஸ்ரேயா நடித்த முதல் படம், எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம்தான். இதன் பிறகு, அவர் 2005 சமயங்களில் மழை படத்தில் நடித்தார். தொடர்ந்து, சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். 

தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்த அவருக்கு, திருமணம் ஆனது. கையோடு, இந்தி திரையுலகிலும் நடிக்க வாய்ப்புகள் பெருகியது. இதைத்தொடர்ந்து அங்கேயே தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிசியாக நடித்து வருவதற்கு மத்தியில், அவரது புது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

ரஜினியுடனான திரைப்படம்..!

ஸ்ரேயா, கடந்த 2007ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க, அந்த படத்தில் ஸ்ரேயா அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்த நடனமாடிய ‘வாஜி வாஜி’ பாடல் செம ஃபேமஸ். என்ன காரணமோ தெரியவில்லை, இந்த படத்திற்கு பிறகு இருவருமே ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. 
ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2..!

நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் பாகம் 3 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியானதை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் நடிகர் ரஜினிகாந்த் ‘முத்துவேல் பாண்டியன்’ எனப்படும் கேரக்டரில் வருகிறார். சில வாரங்களுக்கு முன்பாகவே படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நடந்து முடிந்து விட்டது. எடிட்டிங் உள்ளிட்ட சில ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

ஸ்ரேயாவுடன் செல்ஃபி..!

நடிகை ஸ்ரேயா, தான் ரஜினிகாந்துடன் எடுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோவில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பாடலையும் இணைத்துள்ளார். அது வேறு எந்த பாடலும் இல்லை, செம ஹிட் ஆன ‘வாஜி வாஜி’ பாடல்தான். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், “நீங்கள் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?” என கேட்டு வருகின்றனர்.

வெளியான முதல் பாடல்..

சில நாட்களுக்கு முன்பாக ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. அதில், நடிகை பூர்ணா நடனமாடி இருக்கிறார். இவர், ரஜினியுடன் இணைந்து முதன்முறையாக இந்த பாடலில் நடனமாடி இருக்கிறார். இந்த படம், அனிருத்தின் முந்தைய பாடல்களை போல பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை எனும் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema