தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் வருடா வருடம் புது சீசன் தொடங்குவதற்கு முன்னர், ஏதேனும் புதிய விஷயம் ஒன்றை இன்ட்ரோ செய்வர். இம்முறை பொது மக்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இணைக்கும் பொருட்டு, பிக்பாஸ்: தி காமன் மேன் ஷோ என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக பிக்பாஸ் தி காமன் மேன் ஷோவிற்கான தேடல் தொடங்கியது. சேனலின் மின் அஞ்சலுக்கு யாரெல்லாம் வீடியோ அனுப்பினார்களோ அவர்களில் ஃபில்டர் செய்து, ஒரு சிலருக்கு மட்டும் வீடியோ காலின் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், ஒரு சில பேரை தேர்வு செய்து ஒரு சில பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நேரில் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு க்ரூப் டிஸ்கஷன் நடத்தப்பட்டு, இறுதியாக டாப் 50 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 3 நடுவர்கள் கடைசியாக நேர்காணல் நடத்தினர்.
டாப் 50யில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான போட்டிகளும் கடுமையாக இருந்தன. இதில், இறுதி நேர்காணல் வரை சென்ற சிலர் செலக்ட் செய்யப்பட்டும், சிலர் ரிஜெக்ட் செய்யப்பட்டும் அனுப்பப்பட்டனர். ரிஜெக்ட் ஆனவர்கள் வெளியே வந்த பின்பு, சேனல் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவர்கள் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கின்றனர்.
பிக்பாஸ் தி காமன் மேன் ஷோவில் கலந்து கொள்ள 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த விதிமுறையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், இது பிரபலம் அல்லாதவர்களை பிரபலமாக்கும் ஷோ என்றாலும், இதில் கலந்து கொண்டு செலக்ட் ஆன பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது ரிஜெக்ட் ஆனவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஒரு இளைஞர், தான் 10 நிமிடங்கள் அங்கிருந்த நடுவர்களிடம் பேசியதாகவும், ஆனால், தான் 30 விநாடிகள் பேசியது போல வெட்டி ஒட்டப்பட்டிருப்பதாகவும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளர் நைட்டி போட்டு கலந்து கொண்டார். அப்போது, இது போன்ற ஆடையை ஏற்கனவே இதற்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸில் செய்து விட்டதாகவும், அதில் தனக்கு புதிதாக எதுவும் தெரியவில்லை என்றும் நடுவர்கள் கூறினர். அந்த பெண், “பிக்பாஸே fake” என்று தெரிவித்ததோடு, வெளியில் வந்து பல நேர்காணல்களை கொடுத்து வருகிறார். கூடவே, ஓவியா, ஆரி, ராஜுதான் நடுவர்கள் என கூறிய அவர், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மாயா ஏன் நடுவராக இருக்கிறார்? என்றும் கேட்டார்.
ஒரு பிரபலமான சேனலில் தொகுப்பாளராக இருக்கும் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே போல, முனியம்மா என்கிற போட்டியாளரும் ஏற்கனவே தன்னுடைய யூடியூப் சேனலில் பல லட்சம் சப்ஸ்கரைபர்ஸ் வைத்தவராக இருக்கிறார். இது குறித்து கேட்ட ரிஜெக்ட ஆன போட்டியாளர்கள், இவர்கள் எல்லாம் காமன் மேனா? எதன் அடிப்படையில் அவர்களை செலக்ட் செய்தீர்கள்? என்று கேட்டு வருகின்றனர்.