• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /66 வயது பாலையாவிற்கு..ஜோடியாகவும்-பாட்டியாகவும் நடித்த தமிழ் நடிகை! யார் தெரியுமா?

66 வயது பாலையாவிற்கு..ஜோடியாகவும்-பாட்டியாகவும் நடித்த தமிழ் நடிகை! யார் தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் மாபெறும் நடிகராக திகழ்பவர், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரை அனைவரும் பாலையா என குறிப்பிடுவர். இவருடன் நடித்த ஒரு நடிகை ஜோடியாகவும் பாட்டியாகவும் நடித்திருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 19, 2026, 11:41 AM IST|Updated: Aug 19, 2026, 11:51 AM IST
joinshare
66 வயது பாலையாவிற்கு..ஜோடியாகவும்-பாட்டியாகவும் நடித்த தமிழ் நடிகை! யார் தெரியுமா?
Image Credit: Balayya | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஆந்திராவிற்கு சென்று பாலையா என்கிற பெயரை உச்சரித்தாலே நம்மை சுற்றி ஒரு 20 பேர் கூடிக்கொள்வர். அப்பேற்பட்ட ரசிகர் கூட்டத்தை கொண்டவராக இருக்கிறார் பாலையா என்கிற நந்தமுரி பாலகிருஷ்ணன். இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன என்பதைத்தாண்டி தென்னிந்தியாவின் மாபெறும் அரசியல் மற்றும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் இவர். 66 வயதாகியிருக்கும் போதிலும், தன்னை விட பாதி வயது குறைவான நடிகைகளுக்கு தனக்கு ஜோடியாகவும், தன்னுடைய தாயாகவும் நடிக்க வைத்து வருகிறார். அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த ஒரு நடிகை, பின்னர் அவருக்கு பாட்டியாகவும் நடித்தார். அந்த நடிகை யார் தெரியுமா?

முதலில் ஜோடி..அப்பறம் பாட்டி! யார் அந்த நடிகை?

அந்த நடிகை வேறு யாருமில்லை..சிம்ரன்தான். தமிழில், ஏழுமலை, பஞ்ச தந்திரம், துள்ளாத மனமும் துள்ளும் என பல படங்களில் நடித்து 2000களில் டாப் ஹீரோயினாக இருந்தவர் இவர். சிம்ரன் தமிழில் மட்டும் நடிக்கவில்லை. பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவர், பாலையாவுடன் சமரசிம்ஹா ரெட்டி எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கோபால் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படம், 1999ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமாகும். திரையுலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்த இந்த திரைப்படம், வெளியாகி 27 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்களுக்கு இன்றளவும் ஃபேவரெட் ஆக இருக்கும் திரைப்படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தில் நடிகை சிம்ரன் பாலையாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Simran Balayya

பாட்டியாக எந்த படத்தில்?

அதே பாலகிருஷ்ணாவும் சிம்ரனும், 2008ல் வெளியான இன்னொரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால், இதில் சிம்ரன் ஹீரோயின் அல்ல. இதில், பாலையாவிற்கு இரட்டை வேடம். ஒரு வேடம் தாத்தா, இன்னொரு வேடம் பேரன். இதில் தாத்தா வேடத்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்து, குட்டி பாலையாவிற்கு பாட்டியாகவும் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெறிய ஹிட் அடித்த படமாகும். இதில், பாலையாவிற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.

இப்போது என்ன செய்கிறார் பாலையா?

நடிகர் பாலையாவிற்கு 66 வயதானாலும் இப்போது இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராக இருக்கிறார். இப்போது வரை ஃபேமிலி ஆடியன்ஸ், பாலையா திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீ-மேக்தான், ஜனநாயகன் திரைப்படமாக வெளியானது.

பாக்ஸ் அபிஸிலும் சாதனை படைத்து வரும் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்களுக்கு ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் தனி பிரியம் இருக்கிறது. இவரது பெரும்பாலான படங்கள், முதல் நாளிலேயே சுமார் ரூ.50 கோடி வரை வசூலை ஈட்டி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இத்தனை சாதனைகளையும் செய்திருக்கும் பாலையா, சமீபத்தில் அகண்டா 2 எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் அவருடைய முந்தைய படங்களை போல வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது கொரட்டால சிவாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 66 வயதான போதிலும், தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema