• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் ஆவது எப்போது? வெளியான அப்டேட்!

ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் ஆவது எப்போது? வெளியான அப்டேட்!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 18, 2026, 05:59 PM IST|Updated: Aug 18, 2026, 06:16 PM IST
joinshare
ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் ஆவது எப்போது? வெளியான அப்டேட்!
Image Credit: Jailer 2 | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கும் ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட், தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

முதல் பாடல் ரிலீஸ்..

ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘ஜெயிலர் 2’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்பாடல் வெளியாவது எப்போது என்பது குறித்த அப்டேட்  வெளியாகி இருக்கிறது.

The Feast is ready! #Jailer2 First Single releasing on August 21 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren #SantoshRaju @kabilanchelliah @RIAZtheboss #Jailer2FromOct15 pic.twitter.com/PKPNXvONXH

— Sun Pictures (@sunpictures) August 18, 2026

இந்த அப்டேட்டின் படி, ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள், அனிருத்தின் இசையில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. 

ஜெயிலர் 2 :

2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தின் தொடக்கமாக, ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது. முழுமையான படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே தன் பங்கு படப்பிடிப்பை முடித்த ரஜினி, தன்னுடைய அடுத்த பட வேலைகளை தொடங்கி விட்டார்.

முக்கிய கதாப்பாத்திரங்கள் யார்?

ஜெயிலர் திரைப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரங்களில் ரஜினிகாந்துடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த பாகத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் அதே ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதே கதாப்பாத்திரங்கள்தான், இந்த பாகத்திலும் முக்கிய கேரக்டர்களாக வருகின்றன. 

இசை வெளியீட்டு விழா எப்போது?

வழக்கமாக எந்த ரஜினி படம் உருவானாலும் அதை சுற்றி பெரிய எதிர்பார்ப்பும் உருவாகும். அதற்கு காரணம், அந்த படத்தின் இசை வெளீயீட்டு விழா. ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும், ரஜினிகாந்த் என்ன பேச இருக்கிறார் என்பதே பெரிய எதிர்பார்ப்பு தான். அதற்கு ஏற்றது போல, ரசிகர்களை கொஞ்சமும் ஏமாற்றாமல் எப்போதும் ரஜினிகாந்த் தன் ஸ்டைலில் ஒரு கதையை சொல்வது வடைக்கு பாயாசம் போல அவ்வளவு ருசியாக இருக்கும்.

மலேசியாவில் இசை வெளியீட்டு விழா?

ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் இருக்குமொரு பிரம்மாண்ட அரங்கில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், மலேசியாவில் ஜனநாயகன் படத்தை நடத்தி கொடுத்த டத்தோ மாலிக் என்பவருடன் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் போட்டோ எடுத்திருந்தார். அந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இப்படிப்பட்ட ஒரு சந்தேகமும் பரவ தொடங்கி இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema