• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /15 வயதில் திருமணம்.. இளமையில் வறுமை! செளகார் ஜானகியின் மறைக்கப்பட்ட வாழ்க்கை கதை!

15 வயதில் திருமணம்.. இளமையில் வறுமை! செளகார் ஜானகியின் மறைக்கப்பட்ட வாழ்க்கை கதை!

Sowcar Janaki Unknown Facts : நடிகை செளகார் ஜானகி, தன்னுடைய 94வது வயதில் காலமானார். இவருடைய தனிிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 22, 2026, 10:23 AM IST|Updated: Aug 22, 2026, 10:32 AM IST
joinshare
15 வயதில் திருமணம்.. இளமையில் வறுமை! செளகார் ஜானகியின் மறைக்கப்பட்ட வாழ்க்கை கதை!
Image Credit: Sowcar Janaki | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Sowcar Janaki Unknown Facts : தமிழ் சினிமாவின் தேசிய முகமாக இருந்தவகளுள் ஒருவர்தான், சௌகார் ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருந்த அவர், ஆகஸ்ட் 21ஆம் தேதியான நேற்று காலமானார்.

செளகார் ஜானகி காலமானார்:

சௌகார் ஜானகி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு 94 வயது ஆகும் நிலையில், இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வந்த செளகார் ஜானகி, இன்று இவ்வுலகை விட்டு பிரிந்திருப்பது அவருக்கு நெருக்கமான இருக்கும் திரையுலகினருக்கு தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில், இவர் சினிமாவிற்குள் வந்த போது என்னென்ன மாதிரியான சிரமங்களை அனுபவித்தார் என்பது குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளம் வயதில் ஹீரோயினாக நடித்த சௌகார் ஜானகி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், நகைச்சுவை, நெகடிவ் பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். வயதான பின்பு பாட்டி கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதெல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் வாழ்வில் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ன?

வானொலியில் இருந்தவர்..!

சௌகார் ஜானகியின் சொந்த ஊர், ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி ஆகும். அங்கு 1931ஆம் ஆண்டில் பிறந்த இவரது இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. இவருடைய தந்தை, காகித ஆலை நடத்தி வந்தார். அவரது தொழில் காரணமாக இவருடைய குடும்பம் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டி இருந்ததால், ஒரு கட்டத்தில் ஜானகி சென்னைக்கு குடிபெயர்ந்தார். அப்போது பள்ளியில் படித்து வந்த அவர் சிறு குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சென்னை அகில இந்திய வானொலியில் நாடகக் கலைஞராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்போதே இவருக்கு தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு சௌகார் ஜானகியின் குடும்பத்தார் அனுமதிக்கவில்லை.

இளம் வயதில் திருமணம்!

சௌகார் ஜானகிக்கு சிறு வயதிலேயே..அதாவது 15 வயதிலேயே உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர், திருமணத்திற்கு பின் தன்னுடைய கணவருடன் விஜயவாடாவில் வசித்து வந்தார். செளகார் ஜானகியின் பொருளாதார நிலை, திருமணத்திற்கு பின் சரிந்துள்ளது.

பிழைப்பதற்காக சௌகார் ஜானகி சினிமாவிற்குள் வர வேண்டியதாக இருந்தது. இந்த சமயத்தில் அவருக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்திருந்தது.  திருமணம் செய்து, குழந்தை பிறந்த ஒரு பெண்ணிற்கு சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், தன் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு சௌகார் ஜானகி தனக்கிருந்த பல வித தடைகளை மீறி நடிக்க வந்திருக்கிறார்.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் சௌகார் ஜானகி, திருமணாகி கைக்குழந்தையுடன் கதாநாயகியாக நடிக்க தனக்கு தயக்கமாக இருந்ததாகவும், குடும்ப சூழலை கருத்தில் கொண்டு சினிமாவிற்குள் கால் பதித்ததாகவும் கூறியிருந்தார்.

முதல் படத்திற்கு கிடைத்த சம்பளம்..

சௌகார் ஜானகி, தன்னுடைய முதல் படத்தில் நடித்த போதே அவருக்கு ரூ.2,500 சம்பளமாக கிடைத்ததாம். அந்த படத்தின் பெயர், ஷாவுக்காரு. இது, தெலுங்கில் வெளியான படமாகும். இந்த படத்தில் நடித்ததால்தான், இவருடைய பெயர், ‘சௌகார் ஜானகி’ என்றானது.

தமிழில் சௌகார் ஜானகிக்கு முக்கியமான படமாக அமைந்தது, வளையாபதி. இதையடுத்து அவருக்கு ஜெமினி கனேசன், சிவாஜி  கணேசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பொதுமக்கள் பார்வைக்கு..

நடிகை செளகார் ஜானகிக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை, சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இவருக்கு இறுதி சடங்குகள் நடக்க உள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema