• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விரிவான விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விரிவான விமர்சனம்

Pyaar Prema Kalyanam : பியார் பிரேமா காதல், ஸ்டார் படங்களை இயக்கிய இளன் இயக்கத்திலும், நடிப்பிலும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 21, 2026, 01:23 PM IST|Updated: Aug 21, 2026, 01:28 PM IST
joinshare
பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விரிவான விமர்சனம்
Image Credit: Pyaar Prema Kalyanam Movie Release | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Pyaar Prema Kalyanam : இயக்குநர் இளன் இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருக்குது.

பியார் பிரேமா கல்யாணம் - படத்தின் கரு

இந்த படத்தோட கதை கொஞ்சம் வித்தியாசமானது. பொதுவாக, கல்யாணம் ஆன உடன் மணப்பெண், மணமகன் வீட்டுக்குப் போறதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த படத்தில் அதற்கு அப்படியே எதிராக கதாநாயகன், கதாநாயகியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

இதன்பின்னர், அந்த குடும்பத்திற்குள் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன, கணவன் – மனைவி உறவில் என்னென்ன மாறுதல்கள் வருகின்றன. குடும்பத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் எப்படி மோதல்கள் வருகின்றன என்பதுதான் படத்தின் முக்கியமான கரு.

யார் யார் நடித்திருக்கிறார்கள்...?

ஹீரோவாக இளன் சிறப்பாகவே நடித்திருக்கிறார், இது அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம். அவருக்கு ஜோடியாக 'குடும்பஸ்தன்' நாயகியான சான்வே மேகனா நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் பிளஸ்

இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு எனலாம். அதே மாதிரி அந்த கதையை எடுத்துக்கொண்டவிதமும், யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதும் இயக்குநர் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.

படத்தின் மைனஸ்

இந்தப் படத்தோட மைனஸ் என்றால், பாடல்கள் எதுவுமே மனசுக்கு நெருக்கமாக வரவில்லை. ஏனென்றால், 'பியார் பிரேமா காதல்' படத்தில், பாடல்கள்தான் படத்தோட பிளஸ். அதே மாதிரியே இதுலயும் கையாள முயற்சி பண்ணி இருக்கிறார்கள், அது கொஞ்சம் தோல்விதான்.

சற்று நீளமான படம்

ஒரு சில இடங்களில் படம் கொஞ்சம் நீண்டே போன மாதிரி உணர முடிந்தது. மற்றபடி இந்த படம் பார்ப்பதற்கு மிக அழகா கூட்டுக்குடும்பம் எந்த அளவு முக்கியம் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள்.

நெட்பிளிக்ஸ் ரிலீஸ்

'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இளன், இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.   

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema