Toxic Pre Release Event : இந்திய திரையுலகினரால், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது டாக்ஸிக். இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்க, யாஷ் உடன் சேர்ந்து கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் விழாக்கள் நடைப்பெற்று வருவதை தொடர்ந்து ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. அப்போது ரசிகர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
டாக்ஸிக் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பல ஆயிரம் பேர் இங்கு திரண்டனர். கொண்டட்டமாக இருந்த இந்த நிகழ்ச்சியில், அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
யாஷ், இந்த நிகழ்ச்சியின் போது ஸ்டேஜ் மீது ஏறி பேச ஆரம்பித்தார். அப்போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஒரு சிலர் அங்கு லைட்டிற்காக வைக்கப்பட்டிருந்த லைட் கம்பத்தின் மீது ஏறினர். அதை பார்த்த யாஷ், “தம்பி கீழ எறங்குப்பா..” என சத்தம் போட்டார். அந்த சமயத்தில் லைட் கம்பம் கீழே விழுந்ததில் இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
காயம் பட்டவர்களில் ஒருவர் பெண் என்று கூறப்படுகிறது. இவர் சம்பவம் நடந்த போது அந்த இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக காயமடைந்த இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் தற்போதைய உடல்நலன் எப்படி இருக்கிறது, இவர்களுக்கு என்ன ஆனது என்பது குரித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.
Yash was shocked, stopped his speech, and asked the security team to check on the situation after a minor accident occurred at the TOXIC event..
— Laxmi Kanth (@iammoviebuff007) August 23, 2026
நடிகர் யாஷ், நேற்று மாணவர்கள் மத்தியில், அவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை குறித்து அட்வைஸ் செய்தார். சினிமாவை ஒரு போதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று கூறிய அவர், நாங்கள் பெரிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்ரும், உங்களுக்கு வாழ்க்கையில் என்ன செய்ய பிடித்திருக்கிறதோ அதை நோக்கி செல்லுங்கள் என்றும் கூறினார். மேலும், அதை செய்தாலே வெற்றி உங்களை தேடி வரும் என தெரிவித்த அவர், உலகத்தை குறை சொல்லாமல், வெற்றி நம்மிடம் வருவதற்கும் நாம்தான் பொறுப்பு என கூறினார்.
தமிழ் திரையுலகில் அஜித், ரஜினி, விஜய் என எத்தனையோ ஹீரோக்கள் இருநத்னர், இருக்கின்றனர். அதில் அஜித்குமார் மட்டும் பல சமயங்களில் தனியாக தெரிவார். இதற்கு காரணம், அவர் அவருடைய ரசிகர்களை நடத்தும் விதம். தனக்காக, தன்னைத்தேடி வரும் கூட்டத்தை சினிமாவுடன் நிறுத்திக்கொள்ளும் அவர், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் ப்ரைவேட் ஆக வைத்துக்கொள்கிறார். தன்னை ஃபாலோ செய்பவர்களுக்கு, “உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். திரை நட்சத்திரங்களை பின் தொடராதீர்கள்” என்று அடிக்கடி கூறுவார். இவரது நடத்தைகள் அவருடைய ரசிகர்களுக்கு மரியாதை குறைவாக இருப்பதாக பல சமயங்களில் பேசப்பட்டாலும், அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தற்போது அதே பாணியில், நடிகர் யாஷும், தன்னுடைய ரசிகர்களுக்கும் மாணவர்களுக்கும் அட்வைஸ் செய்திருப்பது வைரலாகி வருகிறது.