• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /முதுபெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... முதல்வர் விஜய் இரங்கல்

முதுபெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... முதல்வர் விஜய் இரங்கல்

Actress Sowcar Janaki Passed Away: முதுபெரும் நடிகையான சௌகார் ஜானகி (94) வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் இன்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Written BySudharsan G
Published: Aug 21, 2026, 02:39 PM IST|Updated: Aug 21, 2026, 03:41 PM IST
joinshare
முதுபெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... முதல்வர் விஜய் இரங்கல்
Image Credit: Sowcar Janaki Passed Away | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Actress Sowcar Janaki Passed Away: முதுபெரும் நடிகையான சௌகார் ஜானகி (94) வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் இன்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகை சௌகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்த முதுபெரும் நடிகை ஆவார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 400 திரைப்படங்களில் நடித்து ஒரு சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது வென்றவர்

கலை மற்றும் சினிமா துறைக்கு அவர் வழங்கிய தனித்துவமான மற்றும் வாழ்நாள் பங்களிப்பைப் பாராட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியிருந்தது. அவரது நீண்ட நெடிய திரைப்பயணத்தில் பல விருதுகளை குவித்துள்ளார்.

பாமா விஜயம் முக்கிய திரைப்படம்

1931ஆம் ஆண்டில் டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திரா மாநிலத்தில் பிறந்தவர். 1950ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் கால் பதித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். கே. பாலசந்தர் இயக்கத்தில் பாமா விஜயம் திரைப்படத்தில் இவர் இவரது பங்கஜம் கதாபாத்திரம் பெரும் கவனத்தை பெற்றுத் தந்தது.

பணம் படும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இரு கொடுக்கள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி உள்ளிட்ட இவரது தமிழ் திரைப்படங்கள் கவனிக்கத்தக்கவை.

4 முதல்வர்களுடன் பணியாற்றியவர்

அதோபோல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் உள்ளிட்ட மூன்று முதலமைச்சர்களுடன் இவர் நடித்துள்ளார். மறைந்த கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தையும் பேசி இவர் நடித்துள்ளார். இதனால் 4 முதலமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை கொண்டவர்.

2020இல் கடைசி படம்

பின் நாட்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சந்தானம் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் சௌகார் ஜானகி நடித்திருந்தார். சினிமாவுக்கு முன்பே தனது 15வது வயதில் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். தமிழில் கடைசியாக 2020ஆம் ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது X பதிவில், "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப்…

— CMOTamilNadu (@CMOTamilnadu)

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சௌகார் ஜானகி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட முதலமைச்சர், அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema