• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /விஸ்வநாத் & சன்ஸ் 200 கோடி வசூல்! சூர்யாவிற்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்த 2 படங்கள்..

விஸ்வநாத் & சன்ஸ் 200 கோடி வசூல்! சூர்யாவிற்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்த 2 படங்கள்..

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு. இதன் மூலம் சூர்யாவிற்கு 2 அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்துள்ளன.

Written ByYuvashree M
Published: Aug 24, 2026, 01:10 PM IST|Updated: Aug 24, 2026, 01:16 PM IST
joinshare
விஸ்வநாத் & சன்ஸ் 200 கோடி வசூல்! சூர்யாவிற்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்த 2 படங்கள்..
Image Credit: Viswanath and sons | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்:

2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக  வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.

குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!

சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது அவரது நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு வகைத் திரைப்படங்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரையுலகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.

“விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.

“வாத்தி”, “லக்கி பாஸ்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி , மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்கு தேவையான அம்சங்களுடன் இப்படத்தைத் தந்து அசத்தியுள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

ரூ.200 கோடியை கடந்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான உற்சாகத்தை அளித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema