விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக CJP கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி விமான நிலையத்திலேயே போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
Jantar Mantar Protest, Abhijeet Dipke Detained: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக CJP கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி விமான நிலையத்திலேயே போலீசார் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் போராட்டத்தை முன்னிட்டு, மும்பையில் இருந்து விமானத்தின் மூலம் அபிஜீத் திப்கே உள்ளிட்ட சிஜேபி தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்தனர். அவர்களை தடுப்புக் காவலில் எடுக்க டெல்லி போலீசார் அவர்களின் விமானத்திற்கே நேரடியாக வந்ததை, அபிஜீத் தீப்கே அவரது இன்ஸ்டா லைவ் மூலம் தெரிவித்தார்.
காக்ரோச் ஜனதா கட்சி இன்று (அக். 10) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அறிவித்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கவலைகள் உள்ளிட்ட காரணங்களை காவல்துறை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. போராட்டத்திற்கு முன்பே தங்களை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக, இவர்கள் முன்பே கூறியிருந்தனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
CJP போராட்டத்தின் பின்னணி
CJP முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்: Special Intensive Revision (SIR) வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக காக்ரோச் ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதையும் CJP வலியுறுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் CJP தரப்பின் வாதங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CJP தரப்பின் முக்கிய கோரிக்கை: SIR தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்திலும் தாக்கம்: போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சில மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதுடன், சாலை போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாடப் பயணத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பினராயி விஜயன் கைது
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முயன்றி கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி, தமிழ்நாடு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
CJP தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
காவல்துறை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் போராட்டத்தை தொடரப்போவதாக காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்பட்டாலும் தங்களின் இயக்கம் தொடரும் என்று சௌரவ் தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கூறியிருந்தனர்.
டெல்லியில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளும், போராட்டம் நடத்துவதற்கான உரிமை குறித்த CJP தரப்பின் வாதங்களும் இந்த விவகாரத்தின் இரு முக்கிய கோணங்களாக மாறியுள்ளன.
மேலும் படிக்க | துருவ் ராத்தீ கைது... தீவிரமடையும் CJP போராட்டம் - டெல்லியில் பரபரப்பு