Delhi October 10 CJP Protest : டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளும் வீதியில் இறங்கி போராடுவதால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அந்த வகையில், வாக்கு திருட்டு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி அதற்கு எதிராக நாளை (அக். 10) போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்திருப்பதால் டெல்லி போலீசார் பொது போக்குவரத்து சார்ந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வார இறுதி நாட்கள் என்பதால் ஜந்தர் மந்தர் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள காரணத்தால், இன்று (அக். 9) டெல்லி மெட்ரோ ரயில் அதன் ரயில் இயக்கத்தை குறைத்துள்ளது.
அதுமட்டுமின்றி இன்றிரவு 9 மணி முதல் நாளை (அக். 10) சூழல் சீராகும் வரை 57 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மூடுவதற்கு டெல்லி போலீசார் முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக, ராஜிவ் சௌக், மத்திய தலைமை செயலகம், உச்சநீதிமன்றம் புது டெல்லி, காஷ்மீர் கேட், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ, படேல் சௌக் உள்ளிட்ட நிலையங்கள் அடங்கும்.
மேலும், ஹவுஸ் காஸ், சராய் காலே கான்-நிஜாமுதீன், லஜ்பத் நகர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா உள்ளிட்ட பல மெட்ரோ வழித்தடங்களில் உள்ள நிலையங்களையும் இந்த உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜன்பத், படேல் சவுக், மத்திய தலைமைச் செயலகம், லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், புது டெல்லி, சேவா தீர்த், மண்டி ஹவுஸ், பாராகம்பா ரோடு, ஐடிஓ, டெல்லி கேட், கான் மார்க்கெட், ஆர்.கே. ஆசிரமம் மார்க், ஜண்டேவாலான், உச்ச நீதிமன்றம், இந்திரபிரஸ்தா, சிவாஜி ஸ்டேடியம், ஐஎன்ஏ (இரு மெட்ரோ பாதைகளும்), ஹவுஸ் காஸ், ஜோர் பாக், அர்ஜன்கர், சராய் காலே கான் - நிஜாமுதீன், லஜ்பத் நகர், ஜங்புரா, ஆசிரமம், காளிந்தி குஞ்ச், ஜசோலா, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஓக்லா விஹார், சாவ்டி பஜார், ஜமா மசூதி, கரோல் பாக், ராஜேந்திர பிளேஸ், விஸ்வவித்யாலயா, விதான் சபா, சிவில் லைன்ஸ், காஷ்மீரி கேட், இந்தர்லோக், ஜி.டி.பி. நகர் (GTB நகர்), கன்னையா நகர், நேதாஜி சுபாஷ் பிளேஸ், ஆசாத்பூர், ஆதர்ஷ் நகர், ஜஹாங்கீர்புரி, ஹைதர்பூர் பாத்லி மோர், மஜ்லிஸ் பார்க், ஷாலிமார் பாக், சீலம்பூர், மவுஜ்பூர், ஜாஃப்ராபாத், வெல்கம், யமுனா விஹார், கஜூரி காஸ், ஷாஹ்தரா, ரிதாலா, ரோஹிணி கிழக்கு, ரோஹிணி மேற்கு.
முன்னதாக, இந்தியன் ரயில்வேயும் பல்வேறு ரயில் சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களைச் சுற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்ற காரத்திற்காக நாளை அதிகாலை 4 மணிமுதல் மதியம் 3 மணிவரை, இந்த 2 இரண்டு ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய அனைத்து பயணிகள் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் ரத்து செய்து இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே துறையின் பயிற்சி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் இரண்டு ரயில் நிலையங்களைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைகளை பகடி செய்யும் வகயைில் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மெட்ரோ, ரயில்வே, இணைய சேவை ஆகியவை நிறுத்தியிருக்கிறார், 50 இன்ச் விஸ்வகுரு மாமனிதர்" என பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு சாடி உள்ளார்.
Metro: Shut down Railways: Shut down Internet: Shut down 50 inch vishwaguru mahamanav 😂😂😂 https://t.co/Ar7uiRuhAj
— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 9, 2026
முன்னதாக, தங்களின் அக்டோபர் 10 போராட்டத்திற்கு முன்னதாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை பாஜக அரசு தடுத்து வைத்துள்ளது என்றும் மோடியின் இந்த மிரட்டல் எடுபடாது என்றும் அபிஜித் தீப்கே பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "நாட்டின் இளைஞர்கள் இனி உங்களுக்குப் பயப்பட மாட்டார்கள். நாளை டெல்லியில் தரையிறங்குவேன், என்ன நடந்தாலும் சரி, ஐந்தர் மந்தருக்கு பேரணியாகச் செல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.