• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explainer: BRICS New Delhi Declaration என்றால் என்ன? உலக பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

Explainer: BRICS New Delhi Declaration என்றால் என்ன? உலக பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

New Delhi Declaration 2026 மூலம் உலக பொருளாதார அமைப்புகளில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் BRICS நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

Written ByR Balaji
Published: Sep 13, 2026, 05:22 PM IST|Updated: Sep 13, 2026, 05:25 PM IST
joinshare
Explainer: BRICS New Delhi Declaration என்றால் என்ன? உலக பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

செப்டம்பர் 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 18 வது BRICS உச்சி மாநாட்டில் New Delhi Declaration 2026 என்ற முக்கிய அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகளுக்கு உலக பொருளாதார முடிவெப்புகளில் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். IMF, World Bank, WTO முதல் சர்வதேச வர்த்தகம், உள்ளூர் நாணயப் பரிவர்த்தனை, எரிசக்தி பாதுகாப்பு வரை பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், New Delhi Declaration என்றால் என்ன? இது உலக பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

New Delhi Declaration என்றால் என்ன?

BRICS அமைப்பின் 18 வது உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முடிவில் BRICS நாடுகளின் தலைவர்கள் New Delhi Declaration 2026 என்ற கூட்டு அறிக்கையை ஏற்றுக்கொண்டனர். இந்த அறிக்கையில் மொத்தம் 140 பத்திகள், 18 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் Global South நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் போன்றவை இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

தற்போது BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா,இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உள்ளன.

வளரும் நாடுகளுக்கு அதிக குரல்

இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உலக பொருளாதார முடிவெடுப்பின் வளரும் நாடுகளின் பங்களிப்பை அதிகரிப்பதாகும். உலக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் அமைப்புகளில் அவற்றுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது BRICS நாடுகளின் கருத்தாக உள்ளது.

இதனால் உலக பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அமைப்புகளின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என BRICS வலியுறுத்தி உள்ளது.

IMF, World Bank-ல் மாற்றம்?

இதில் முக்கியமாக பேசப்பட்டிருப்பது IMF மற்றும் World Bank தொடர்பான சீர்திருத்தம். சர்வதேச நிதி அமைப்புகளின் நிர்வாக முறைகள் தற்போதைய உலக பொருளாதார நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும் என BRICS நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக IMF-ல் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் Quota மற்றும் Voting Share அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, உலக பொருளாதாரத்தில் ஒரு நாட்டின் பங்கு அதிகரிக்கும்போது, முக்கிய சர்வதேச நிதி அமைப்புகளில் அந்த நாட்டின் குரலுக்கும் அதற்கேற்ற முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

WTO-க்கு ஆதரவு

உலக வர்த்தக அமைப்பான WTO-வின் முக்கியத்துவத்தையும் BRICS மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச வர்த்தகம் என்பது ஒரு சில நாடுகளின் முடிவுகளால் மட்டும் தீர்மானிக்கப்படாமல், அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என BRICS தெரிவித்துள்ளது. திறந்த, வெளிப்படையான நியாயமான மற்றும் விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட வர்த்தக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கும், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் தேவையான சிறப்பு அணுகுமுறை வழங்கபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டாலருக்கு மாற்றாக BRICS நாணயம்?

சமீப காலமாக அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், டாலருக்கு மாற்றாக புதிய நாணயம் உருவாக்கப்படுமா என்பதுதான். ஆனால் New Delhi Declaration BRICS நாடுகளுக்கென தனி பொதுநாணயம் உருவாக்குவது குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, BRICS நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டில் எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொள்வது தொடர்பாகவும் நாடுகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.

ஒருதலைப்பட்ச வர்த்தக வரிகளுக்கு எதிர்ப்பு

ஒரு நாடு தனிப்பட்ட முறையில் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கும் வரிகள் மற்றும் வர்த்தகத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என BRICS கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பலதரப்பு வர்த்தக முறையை வலுப்படுத்த வேண்டும் என BRICS நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

மேற்கு ஆசிய பிரச்சனை ஏன் முக்கியம்?

மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதல்கள் அப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு மட்டுமே பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. அதன் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம். குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம், கப்பல் போக்குவரத்து, காப்பீட்டு கட்டணம் உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் தாக்கம் உலக நாடுகளிலும் இருக்கும். இதன் காரணமாக மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான அணுகுமுறை மூலம் தீர்வு காண வேண்டும் என BRICS தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவுக்கு என்ன முக்கியத்துவம்?

2026 ஆம் ஆண்டுக்கான BRICS தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருந்த நிலையில், டெல்லியில் இந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வளரும் நாடுகளின் குரல் சர்வதேச அமைப்புகளில் அதிகமாக ஒலிக்க வேண்டும் என்பது இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துகளில் ஒன்றாகும். அந்த வகையில், New Delhi Declaration மூலம் Global South நாடுகளின் பிரதிநிதித்துவம், சர்வதேச நிதி அமைப்புகளின் சீர்திருத்தம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வைஅத்து உலக பொருளாதார அமைப்புகள் அடனடியாக மாறிவிடும் என்று கூற முடியாது. IMF, World Bank அல்லது WTO போன்ற அமைப்புகளை ஒரே நாளில் மாற்றுவதற்கான முடிவு இதில் இல்லை. அதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள உலகளாவிய அமைப்புகளுக்குள் வளரும் நாடுகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாகவே இந்த அறிவிப்பை பார்க்கலாம். அதேபோல், BRICS நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை எளித்தாக்குதல், உள்ளூர் நாணயப் பயன்பாடு, எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் முனெடுக்கப்பட உள்ளன.

மொத்தத்தில், New Delhi Declaration என்பது தற்போதைய உலக பொருளாதார அமைப்பை உடனடியாக மாற்றுவதற்கான அறிவிப்பு அல்ல. மாறாக, அந்த அமைப்பில் வளரும் நாடுகளுக்கு அதிக குரலும், அதிக பிரதிநிதித்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்கான BRICS நாடுகளின் முயற்சியாகும்.

இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பு முடிவடைந்த நிலையில், 2027-ம் ஆண்டுக்கான உச்சி மாநாட்டை சீனா நடத்த உள்ளது. அடுத்த கட்டத்தில் இந்த அறிவிப்பில் முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சீர்திருத்த முயற்சிகள் எந்த அளவுக்கு முன்னேறுகின்றன என்பதே கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer