SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மும்பையில் நாளை CJP போராட்டம்! தயாராகும் இளைஞர்கள்..மீண்டும் எழுச்சி நிகழுமா?

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சிறப்பு திவிர திருத்த (SIR) விவகாரத்தில், தனித்து செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவி விலகக்கோரி, போராட்டம் நடத்தப்போவதாக காக்ரோச் ஜனதா கட்சி, சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

Written By Yuvashree M
Published: Oct 01, 2026, 02:01 PM IST | Updated: Oct 01, 2026, 02:10 PM IST
Join

‘நீட்’ தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய போராட்டங்களை முன்வைத்து, காக்ரோச் ஜனதா கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் சில மாதங்களுக்கு முன்பாக போராட்டம் நடந்தது. இதில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அவர்களின் பெற்றோர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், இவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் குரல் கேட்கப்பட்டு, தர்மேந்திர பிரதானும் பதவி விலகினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சமயத்தில், தற்போது புதிதாக தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் குறித்த விவகாரம் தலை தூக்கி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

மும்பையில் போராட்டம் நடத்துவதாக சிஜேபி அறிவிப்பு!

SIR விஷயத்தில், பிர இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனித்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில்தான் தேர்தல் அதிகாரி தனித்து செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் படிக்க | UPI MDR முதல் FD வரை: அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் 5 முக்கிய நிதிசார் மாற்றங்கள்

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர், அபிஜித் திப்கே, சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, இந்திய தலைமி தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த SIR நடவடிக்கைகளின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

48 மணி நேர கெடு:

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும், என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், அபிஜித் திப்கே எச்சரித்திருந்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும், ஆலுங்கட்சிகளுக்கு சாதகமாகவும் இருப்பதாக விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோரின் தேர்தல் தோல்விகள் தற்செயலானவை அல்ல என்று  கூறிய அபிஜித் திப்கே, பாஜகவை எதிர்த்ததற்காகவே அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்தான் இந்த தோல்விக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

பெரும் போராட்டம் வெடிக்குமா?

மும்பையில் இருக்கும் சிவாஜி பார்க் பகுதியில் போராட்டம் நடக்கும் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், அப்பகுதியில் போராட்டம் நடத்த, அங்கிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. எது எப்படி இருப்பினும், கண்டிப்பாக போராட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் என்ற முடிவில் அபிஜித் திப்கே இருக்கிறார் என்பது அவருடைய பதிவுகளை பாார்க்கும் போது தெரிகிறது.

மேலும் படிக்க | வங்கிகளுக்கு இனி சனிக்கிழமை விடுமுறையா? மத்திய அரசு Fact Check சொல்வது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES