SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்தியா கூட்டணி பேரணிக்கு வராதவர்கள் சஸ்பெண்ட்! காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..

இந்தியா கூட்டணியின் பேரணியில் பங்கேற்க முடியவில்லை, என்று காரணம் தெரிவித்த இளைஞர்களை, காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 05, 2026, 12:28 PM IST | Updated: Nov 05, 2026, 12:34 PM IST
Join

சமீபத்தில், டெல்லியில் இந்தியா கூட்டணியின் பேரணி ந்னடைப்பெற்றது. இதில் கலந்து கொள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகிகள் பல்வேறு குடும்ப காரணங்களை கூறி, தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியதால் அவர்களை கட்சியை விட்டே காங்கிரஸ் கட்சி நீக்கியிருக்கிறது.

டெல்லியில் நடைப்பெற்ற பேரணி..!

SIR விவகாரத்தில், முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்படும், தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ் குமார், பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த நவம்பர் 1ஆம் தேதி டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைப்பெற்றது. இதில், மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி உரையாற்றி இருந்தார். இதையடுத்து, இந்த பேரணியில் பங்கேற்காத இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

பங்கேற்காத இளைஞர்கள்..

டெல்லியில் நடந்த இந்த பேரணியில் பங்கேற்காத மத்திய பிரதேசத்தை சேர்ந்த 60 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை, இந்த அமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது. இதில், 9 மாவட்ட தலைவர்கள், 5 துணை தலைவர்கள், 14 பொதுச்செயலாளர்கள், 32 செயலாளரள் உள்ளிட்டோரும் அடங்குவர். நவம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவின் படி, இந்த இடைநீக்கம் உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பேரணியானது, காங்கிரஸ் மற்றும் அதன் இந்தியா கூட்டணி கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. இதில், ம்த்திய பிரதேச நிர்வாகிகள் பங்கேற்காததுதான் அமைப்பு ரீதியான ஒழுங்கீன செயலாக காங்கிரஸ் தலைமை கருதியது. இதனால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகிகள் சொன்ன காரணங்கள்..

கட்சியின் இந்த நடவடிக்கையில் சிக்கிய சில நிர்வாகிகள், தாங்கள் அந்த பேரணியில் கலந்து கொள்ளாததற்கு நியாயமான காரணங்கள் இருந்ததாக கூறியிருக்கின்றனர்.

இளைஞர் காங்கிரஸின் மைஹர் மாவட்டத்தின் தலைவரான சௌரப் ஷர்மா, தன்னுடைய மூத்த சகோதரருக்கு ஆண் குழந்தை பிறந்ததால், பேரணியில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்ததால், இந்த நிகழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | மல்டிபேக்கர் பங்குகளை அடையாளம் காண்பது எப்படி? Kwala Intel கூறும் 7 முக்கிய அளவுகோல்கள்

அதே சமயத்தில், அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்றதாக கூறும் சௌரப் சர்மா, அவரால் இந்த பேரணியில் கலந்து கொள்ள முடியாததால் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். தங்களை நீக்கும் முன்பு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு இளைஞர் தன்னுடைய மாமா இறந்து விட்டதால், இப்பேரணியில் கலந்து கொள்ள முடியாது என்று மாநில தலைவருக்கு தகவல் தெரிவித்ததாகவும், இளைஞர் காங்கிரஸின் ராமசங்கர் ஜியிடமும் தகவல் தெரிவித்ததாகவும் அவரிடம் இதற்கு அனுமதி கேட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கும் முன்பு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

உடல் நலம் குறித்த காரணங்கள்..!

இளைஞர் காங்கிரஸின் அனுப்பூர் எனும் மாவட்டத்தலைவராக இருந்த மன்வேந்திரா மிஸ்ரா, தான் உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் டெல்லிக்கு பயணம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். மாநில தலைமையிடம் இது குறித்து தான் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கும் அவர், தகவல் தொடர்பில் இடைவேளி ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். தன் அணியை சேர்ந்த அனைவரும் பேரணிக்கு சென்றதாக கூறியிருந்த அவர், அனைவருக்கும் பயணச்சீட்டுகளையும் ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் தலைமைக்கு தன் விளக்கத்தை அளிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | அக்னிவீர்களுக்கு மத்திய அரசின் மெகா அறிவிப்பு: சேவை காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்வு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES