• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /விஜய் தளபதி டிரஸ்ட்... உதவித்தொகை தருவதாக மோசடி - வட மாநிலங்களில் நடப்பது என்ன?

விஜய் தளபதி டிரஸ்ட்... உதவித்தொகை தருவதாக மோசடி - வட மாநிலங்களில் நடப்பது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளையில் இருந்து பேசுவதாக கூறி, உதவித்தொகை தருவதாகவும் கூறி, நூதனமான முறையில் பலரிடம் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் புகார்கள் வந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இதேபோல் பல சைபர் மோசடிகள் நடந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Written BySudharsan G
Published: Sep 01, 2026, 10:25 AM IST|Updated: Sep 01, 2026, 10:32 AM IST
joinshare
விஜய் தளபதி டிரஸ்ட்... உதவித்தொகை தருவதாக மோசடி - வட மாநிலங்களில் நடப்பது என்ன?
Image Credit: CM Vijay | Screen Grab : Youtube/@TamilnaduAssembly

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

2

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

3

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

4

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

5

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM Vijay Thalapathy Trust Scam: தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய்தான் தற்போது ஒட்டுமொத்த நாடும் அதிகம் உற்றுநோக்கப்படும் தலைவர் ஆவார்.

குறைந்த காலகட்டத்தில் கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த கட்சிகளை எதிர்க்கட்சி வரிசையில் அமரவைத்திருப்பதன் பலனாக தற்போது பெரும் செல்வாக்கு உடைய தலைவராக விளங்குகிறார்.

'விஜய் தளபதி'

தமிழ்நாட்டை தாண்டியும் முதலமைச்சர் விஜய்யின் பெயர் பலமாகவே உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரின் பெயர் வட மாநிலங்களில் இந்தளவிற்கு உச்சரிக்கப்பட்டிருக்கிறதா என கேட்டால், அது கேள்விக்குறிதான்.

அதுவும் வட மாநிலங்களில் 'விஜய் தளபதி' என்ற பலரும் அழைக்கிறார்கள். அவரது அடைமொழியையே அவருக்கு 2வது பெயராக அவர்களே சூட்டிவிட்டார்கள். அந்தளவிற்கு விஜய் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

விஜய் அறக்கட்டளை பெயரில் மோசடி

இது ஒருபுறம் இருக்கட்டும், விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு சிலர் பெரும் சைபர் மோசடி செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் காவல் துறைக்கு வந்த புகார்களுக்கு பிறகே இந்த அம்பலமானது.

மத்திய  பிரதேசத்தில்தான் இந்த பணமோசடி நடந்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறிக்கட்டளையின் மூலம் ரூ.10 லட்சம் வரை நிதி தருவதாக கூறி சைபர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.10 லட்சம் தருகிறோம் என மோசடி

'CM விஜய் தளபதியின் தொண்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம்' என கூறி சிலரை நம்பவைத்து, 10 லட்ச ரூபாய் லவரை உதவித்தொகை மற்றும் தொழில் ஊக்கத்தொகை தருவதாக கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி உதவித்தொகையை டெபாசிட் செய்துவைப்பதற்கு வங்கியில் புதிய கணக்கை தொடங்கி தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு பதிவுக்கட்டணம், சரிபார்ப்புக் கட்டணம், செயல்பாட்டுக் கட்டணம் என கூறி 10,000 ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து ஏமாற்றி உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் சைபர் கிரைம் பிரிவுக்கு இதுகுறித்து தொடர் புகார்கள் வந்துள்ளன.

போலீசார் கூறுவது என்ன?

குற்றப்பிரிவு ஏடிசிபி ராஜேஷ் தண்டோடியா கூறுகையில், "இந்தூரில் இதுகுறித்து ஏற்கெனவே 6க்கும் மேற்பட்ட புகார்கள் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளன. ஏழைகளுக்கு மானியங்கள் வழங்குகிறோம், தொழில் தொடங்க உதவுகிறோம், அதற்காகவே இந்த அறிக்கட்டளை என கூறி மக்களை மோசடிக்காரர்கள் ஏமாற்றி உள்ளனர்.

इंदौर, मध्य प्रदेश: साइबर ठगों ने तमिलनाडु के मुख्यमंत्री सी. जोसेफ विजय उर्फ थलपति विजय के नाम और कथित फाउंडेशन का सहारा लेकर लोगों से ठगी करने का नया तरीका अपनाया है। फाउंडेशन से आर्थिक सहायता दिलाने का झांसा देकर लोगों से ऑनलाइन पैसे वसूले जा रहे हैं। इंदौर क्राइम ब्रांच और… pic.twitter.com/qRIQYZdxu0

— IANS Hindi (@IANSKhabar) August 31, 2026

பதிவு கட்டணம், செயலாக்கக் கட்டணங்களாக மக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை அவர்கள் மோசடி செய்துள்ளனர். நாடு முழுவதும் இதேபோன்று பல புகார்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மோசடிக்காரர்கள் பயன்படுத்திய பல தொலைபேசி எண்களை நாங்கள் ஏற்கெனவே சரிபார்த்துள்ளோம். மேலும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

போலீசார் அறிவுறுத்தல்

தெரியாத ஒருவருக்கு பணம் அனுப்பவதற்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் நிறுவனத்தின் விவரங்களை சரிபார்க்குபடி காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

இணையவழி மோசடிகளில் சிக்கி பாதிப்படைவோர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். 1930 தேசிய இணையவழி உதவி எண்ணை அழைத்தும் புகார் அளிக்கலாம். இல்லையெனில் தேசிய இணைவழி குற்ற புகார் இணையதளத்தில் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime