SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிஏ உயர்வு, சம்பள உயர்வு, டிஏ அரியர்: அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள்.. இன்று அறிவிப்பா?

DA Hike: அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அதாவது டிஏ அரியர் தொகையும் (DA Arrears) அவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 28, 2026, 08:28 AM IST | Updated: Oct 28, 2026, 08:42 AM IST
Join

DA Hike: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கும் அதே வேளையில், அவர்கள் ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வுக்கும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இதற்கான காத்திருப்பு உள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடவில்லை.

அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு இன்று வருமா?

தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுக்கான அறிவிப்பு வரும் என தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று (அக்டோபர் 28)-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.  அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?

இந்த முறை 3% டிஏ உயர்வு (DA Hike) எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக, அதிகரிக்கும். அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால், ஊழியர்களுக்கு ஜூலை 2026 முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும்.

டிஏ அரியர் தொகை

அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அதாவது டிஏ அரியர் தொகையும் (DA Arrears) அவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க | AI கருவி! பங்குச்சந்தை ஆய்வின் புதிய ஹீரோ... Kwala Intel-ல் என்ன ஸ்பெஷல்?

அக்டோபர் 28 (இன்று) அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுமா?

மத்திய அரசு ஊழியர்கள் அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்தனர், ஆனால் அது நடக்கவில்லை. இதற்கிடையில், ரயில்வே ஊழியர்களுக்கு செயல்திறன் சார்ந்த போனஸையும் (PLB), பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் சாராத போனஸையும் அரசு அறிவித்தது.

ஆனால், அகவிலைப்படி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது, ​​அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி குறித்து அரசு முடிவெடுக்கும் என்று ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். புதன்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்திற்குப் பிறகு அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என 'ஆல் இந்தியா நியூ பென்ஷன் ஸ்கீம் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன்' (All India New Pension Scheme Employees Association) தலைவர் மஞ்சித் சிங் படேலின் கூறியுள்ளார். இருப்பினும், இறுதி முடிவு அரசின் கையிலேயே உள்ளது.

அகவிலைப்படி எப்படி தீர்மானிக்கப்படும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. அரசு இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால், அகவிலைப்படி தற்போதைய 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும். ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான சராசரி சில்லறை பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படும். இதுவே இந்த உயர்வின் அளவைத் தீர்மானிக்கும்.

மேலும் படிக்க | YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

ஊதியம் எவ்வளவு உயரும்?

ஊதிய உயர்வை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்:

ஒட்டுமொத்தமாக, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அக்டோபர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்தால், பண்டிகைக் காலத்தில் இது ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். தற்போதைக்கு, அனைவரும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | Explainer: பிஎம் கிசான் 24வது தவணை 3 நாட்களில் வருகிறது.. யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES