மீண்டும் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
Gangrape in Delhi: தலைநகர் டெல்லியில், நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூரமான சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், ஓடும் ஸ்லீப்பர் பேருந்துக்குள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Gangrape in Delhi: காலம் மாறினாலும் சில காட்சிகள் மாறுவதில்லை. 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், கடும் குளிரில், நள்ளிரவில் டெல்லியில் ஒரு பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின் பல சட்டங்கள் இயற்றப்பட்டன, தண்டனைகளின் தீவிரம் அதிகரித்தன. ஆனால், இன்றளவிலும் யதார்த்ததில் எதுவுமே மாறவில்லை.
பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
தலைநகர் டெல்லியில், நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூரமான சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், ஓடும் ஸ்லீப்பர் பேருந்துக்குள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
நொய்டாவின் பரி சௌக் பகுதியிலிருந்து டெல்லியின் காஷ்மீரி கேட் வரையிலான சுமார் 47 கிலோமீட்டர் பயணத்தின்போது, ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் இழுத்துவிடப்பட்ட திரைகளுக்குப் பின்னாலே இந்தக் கொடூரமான வன்முறைச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவி, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் தனியாகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பதை உணர்ந்த பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் படிக்க | கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை.. தம்பதி அதிரடி கைது.. மணிப்பூரில் சிக்கியது எப்படி?
வீட்டை விட்டு வெளியேறிய மாணவி
மெயின்புரியைச் சேர்ந்த அந்த மாணவி, குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து யாரிடமும் சொல்லாமல் நொய்டாவுக்குப் புறப்பட்டுள்ளார். பலத்த மழை மற்றும் இருள் காரணமாக, அவர் தவறுதலாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள பரி சௌக் (Pari Chowk) பகுதியில் இறங்கியுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த காலியான ஸ்லீப்பர் பேருந்து ஒன்றை அவர் நிறுத்தினார். நொய்டா செக்டார்-63-க்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்துக்குள் ஏற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கிராமங்களை குறி வைத்து... ஆன்லைன் டிரேடிங் மோசடி... மதுரையை அதிரவைத்த சம்பவம்
ஓடும் பேருந்தில் கொடூரம்
பரி சௌக் மற்றும் டெல்லியின் காஷ்மீரி கேட் (Kashmere Gate) இடையே சுமார் 47 கிலோமீட்டர் தூரப் பயணத்தின்போது, திரை போடப்பட்ட அந்த ஸ்லீப்பர் பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துநரும் மாணவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் எதிர்த்தபோது கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நடவடிக்கை
சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நள்ளிரவில் காஷ்மீரி கேட் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணை இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். மிகுந்த அச்சத்தில் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவி காஷ்மீரி கேட் காவல் நிலையத்தை அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், திமார்பூர் (Timarpur) பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.
சூரஜ்பூர் பணிமனையில் பேருந்தை பழுதுபார்த்த பிறகு திமார்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, குற்றவாளிக: பரி சௌக் பகுதியில் அந்த மாணவியை சந்தித்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர் பேருந்து தடயவியல் பரிசோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் விசாரணை
பேருந்தின் தடயவியல் ஆய்வு, சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விசாரணை ஆகியவை விசாரணையின் முக்கிய பகுதிகளாகக் கருதப்படுகின்றன. பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதால், அவரது அடையாளம் தொடர்பான தகவல்கள் வழக்கில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் பஸ் எந்தெந்த வழித்தடத்தில் சென்றது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.