• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /தீபாவளிக்கு பின் தாறுமாறாய் எகிறிய காற்று மாசுபாடு: திணறும் டெல்லி மக்கள்

தீபாவளிக்கு பின் தாறுமாறாய் எகிறிய காற்று மாசுபாடு: திணறும் டெல்லி மக்கள்

Delhi Air Pollution: தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவம்பர் 9, திங்கள்கிழமை), டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதியில் காற்று அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது. பட்டாசுகளிலிருந்து வெளியேறிய புகை, ஏற்கனவே மோசமாக இருந்த காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கியது.

Written BySripriya Sambathkumar
Published: Nov 09, 2026, 08:36 AM IST|Updated: Nov 09, 2026, 08:44 AM IST
joinshare
தீபாவளிக்கு பின் தாறுமாறாய் எகிறிய காற்று மாசுபாடு: திணறும் டெல்லி மக்கள்
Image Credit: Delhi Air Pollution

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delhi Air Pollution: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் காற்று மாசுபாட்டால் டெல்லி மக்கள் கடுமையான இன்னல்களை அனுபவிக்கின்றனர். வாகன மாசுபாடு, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய எச்சம், தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசு, கட்டுமானப் பணிகள், ஏற்கனவே சற்று அதிகமாக இருக்கும் மாசுபாட்டின் அளவு என அனைத்தும் சேர்ந்து இந்த மாதத்தில் டெல்லியின் மாசுபாடு அளவு அதிகரிக்கின்றது.

அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவம்பர் 9, திங்கள்கிழமை), டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதியில் காற்று அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது. பட்டாசுகளிலிருந்து வெளியேறிய புகை, ஏற்கனவே மோசமாக இருந்த காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கியது. இதனால் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) 400-க்கும் மேல் சென்றது.

#WATCH | Delhi: Air Quality Index (AQI) in the area around Ghazipur is 418, categorised as 'Severe', as per the CPCB (Central Pollution Control Board). (Visuals shot at 05:50 am) https://t.co/dIbYaQ64uY

— ANI (@ANI) November 9, 2026

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) 'சமீர்' (Sameer) செயலியின் தரவுகளின்படி, திங்கள்கிழமை காலை 7:00 மணிக்கு டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு 376 ஆகப் பதிவானது. இது 'மிகவும் மோசமான' பிரிவின் கீழ் வருகிறது.

மேலும் படிக்க | உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

பல பகுதிகளில் காற்றின் தரம் 'தீவிர' நிலையை எட்டியது

  • திங்கள்கிழமையன்று, தலைநகரின் பல பகுதிகளில் காற்றின் தரம் 'தீவிர' பிரிவில் பதிவானது.
  • சோனியா விஹாரில் அதிகபட்சமாக 449 என்ற காற்றின் தரக் குறியீடு பதிவானது. 
  • அதனைத் தொடர்ந்து புராடி கிராஸிங்கில் 445 பதிவாகியது.
  • விவேக் விஹாரில் 441 பதிவாகியது.
  • ஜஹாங்கீர்புரியில் பதிவான அளவு 439.
  • டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் (North Campus) 437 என்ற காற்றின் தரக் குறியீடு பதிவாகியது. 
  • ரோஹினியில் இந்த அளவு 435 ஆக இருந்தது.

மேலும் படிக்க | அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

டெல்லியின் பிற பகுதிகளிலும் 'தீவிரமான' பிரிவில் பதிவான காற்றின் தரக் குறியீடு

தீபாவளிக்கு மறுநாளன்று, தலைநகரின் மேலும் பல பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு 'தீவிரமான' பிரிவுக்குள் சென்றது. இதில்

  • டிடியு (DTU - 431), 
  • பாவானா (424), 
  • சாந்தினி சௌக் மற்றும் பட்ஃபர்கஞ்ச் (418) 
  • முண்ட்கா 413-ம், 
  • என்ஐஎச் நரேலா (NIH Narela) மற்றும் பஞ்சாபி பாக் தலா 408,
  • காமன்வெல்த் விளையாட்டு வளாகம் (Commonwealth Sports Complex) மற்றும் ஐடிஓ (ITO) 404 காற்றின் தரக் குறியீடு பதிவாகின.

உச்ச நீதிமன்ற உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட தீபாவளியன்று, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 'பசுமை' பட்டாசுகளைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்தனர். கொண்டாட்டங்கள் நள்ளிரவு வரை நீடித்தன. 'பசுமை' பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தபோதிலும், வழக்கமான பட்டாசுகளே பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மணிநேரத் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 371 ஆக இருந்தது. மொத்தம் உள்ள 59 கண்காணிப்பு நிலையங்களில், 20 நிலையங்கள் மாசு அளவை 'சிவப்பு மண்டலத்தில்' பதிவு செய்தன. இதனால், நகரம் முழுவதிலும் காற்றுத் தரம் 'மிக மோசம்' (very poor) முதல் 'தீவிரமான' நிலைக்கு மாறியது.

திங்கட்கிழமை காலை 7:00 மணிக்கு, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 368 ஆக இருந்தது; இது 'மிக மோசம்' என்ற பிரிவின் கீழ் வருகிறது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் காற்றுத் தரம் 'தீவிர' நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Add Zee News as a Preferred Source
TAGS:
India