SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் அதற்கு பதில் மூன்று பகுதிகளில் போராட்டம் நடத்தலாம் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மூன்று காரணங்களை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 12, 2026, 03:06 PM IST | Updated: Oct 12, 2026, 03:57 PM IST
Join

Delhi Jantar Mantar Updates: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி கடந்த சில மாதங்களாக அரசியல் நீரோட்டத்தில் அதிகம் அடிப்படும் பெயராக மாறிவிட்டது. கடந்த ஜூலை மாதம் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிஜேபி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | பல ஆண்டுகள் போராட்ட சின்னமாக இருந்த ஜந்தர் மந்தர் மூடல்.. டெல்லி போலிஸ் முடிவால் புதிய சர்ச்சை

மூன்று இடங்கள் அறிவிப்பு

மேலும், டெல்லியில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகிய இடங்களில் இனி போராட்டம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஜந்தர் மந்தர் பதிலாக, குடிமக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான உரிமைக்கு மாற்றான மற்றும் பொருத்தமான இடங்களை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைத்திருந்தது.

அந்த வகையில் தற்போது குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் அனுமதி மறுப்பு - மூன்று காரணங்கள்

பாதுகாப்பு சார்ந்த கவலைகள்

பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை இனி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பாக நடத்த இடவசதி போதாது என்பதை அதிகாரிகளும் நீதிமன்ற ஆய்வுகளும் சுட்டிக்காட்டி உள்ளன.

திடீரென பெருந்திரளான மக்கள் கூடும்போது, அவசரக் கால மீட்புப் பணிகள் சென்றடைவது, கூட்ட மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அப்பகுதியின் குறுகிய இட அமைப்பால் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டன.

மேலும் படிக்க | டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி சம்பவம்: சீட் தகராறில் உயிரிழந்த பயணி! 2 பேர் கைது

போக்குவரத்து இடையூறு

முக்கிய அரசு அலுவகங்கள் அருகே உள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு வளையமான லுட்யென்ஸ் பகுதியில் இது அமைந்திருப்பதால், இங்கு அடிக்கடி நடத்தப்பட்ட போராட்டங்கள் போக்குவரத்தை மிகக் கடுமையாக முடக்கின.

மத்திய டெல்லி வழியே பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் தொடர் போக்குவரத்து இடையூறுகளை குறைக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீராக்கவும் இந்த இடம் போராட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் பதற்றங்கள்

காக்ரோச் ஜனதா கட்சி போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட முக்கிய போராட்டங்கள் மற்றும் பிரம்மாண்ட அரசியல் கூட்டங்கள், பேரணிகள் காரணமாக இப்பகுதி சமீபததில் அதிக பாதுகாப்பு கொண்ட போர்க்களம் போல் காட்சியளித்து வந்தது.

அதீத பாதுகாப்பு படை குவிப்பு, தடுப்பு வேலிகள், முன்னெச்சரிக்கை கைதுகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகப் பணிகளையும் பாதித்தன. இதனால், போராட்டங்களை இத்தகைய அதிஉயர் பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த அதிகாரிகளைத் தூண்டியது.

இந்த காரணங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும், இதன் காரணமாகவும் மாற்றப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Explained: இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.120-ஐ எட்டுமா? விலை உயர்வுக்கான பின்னணியும் காரணங்களும்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES