SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explainer: புகை மண்டலமான டெல்லி, அரசின் அதிரடி ஆக்‌ஷன்!! WFH, கட்டுமானத் தடை... நவம்பரில் புதிய விதிகள்

Delhi Pollution: டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தூசியை உருவாக்கும் அனைத்து வெளிப்புறக் கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்கும் நவம்பர் 5 முதல் 15 நாட்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 31, 2026, 02:06 PM IST | Updated: Oct 31, 2026, 02:16 PM IST
Join

Delhi Pollution: ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலைநகர் டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு இந்த ஆண்டும் தலைதூக்கிவிட்டது. டெல்லி புகை மண்டலமாய் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது. பனியா, தூசியா என தெரியாத ஒரு வித படலம் டெல்லியை மீண்டும் சூழ்ந்துள்ளது. இந்த நிலையிலிருந்து மக்களை காக்க அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை

டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தூசியை உருவாக்கும் அனைத்து வெளிப்புறக் கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்கும் நவம்பர் 5 முதல் 15 நாட்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் காற்று மாசுபாடு மிக அபாயகரமான மற்றும் உச்ச அளவை எட்டுகிறது. இதைக் கவனத்தில் கொண்டு, காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

50% ஊழியர்களுக்கு Work From Home

மேலும், என்.சி.ஆர் பகுதியின் ஐந்து மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், சோனிபத், காசியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகியவற்றில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தங்கள் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய (work from home) அனுமதிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிக வாகனப் போக்குவரத்து கொண்ட இந்த ஐந்து மாவட்டங்களில், தொழில் நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், சில அத்தியாவசியத் திட்டங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; அதே சமயம் பிற கட்டுமானப் பணிகளுக்குத் தடை தொடர்கிறது.

எந்தெந்த பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

எந்தெந்த பணிகளுக்குத் தடை தொடரும்?

மேலும் படிக்க | வறுமை ஒழிப்பு... இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவு.. உலக வங்கி சொல்வது என்ன?

இதற்கிடையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், டெல்லியில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) அலுவலகத்தைப் பார்வையிட்டார். அங்கு, காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன கட்டுப்பாட்டு அறையை (Integrated Command and Control Centre) அவர் ஆய்வு செய்தார். அவரது வருகைக்குப் பிறகு, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் அரசின் ஆக்‌ஷன் பிளான்

டெல்லி அரசின் ‘குளிர்கால செயல் திட்டம்’ (Winter Action Plan) நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள், டெல்லி அரசின் 10 அம்சங்களைக் கொண்ட ‘குளிர்கால செயல் திட்டத்திற்கு’ கூடுதலாக அமல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டம் நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28, 2027 வரை நடைமுறையில் இருக்கும். இதன் கீழ் தூசியை உருவாக்கும் இடிப்புப் பணிகள் மற்றும் வெளிப்புறக் கட்டுமானப் பணிகளைத் தடை செய்யப்படுகின்றன. மேலும், டிசம்பர் 10 முதல் 2027 ஜனவரி 20 வரை அனைத்து வகையான கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளும் முழுமையாக நிறுத்தப்படும்.

டெல்லி அரசின் ‘குளிர்கால செயல் திட்டத்தின்’ கீழ், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மூன்று முக்கிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | DLC Campaign 5.0: நவம்பர் 1 முதல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம்... ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

கழிவுகளை எரிப்பதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள்

வாகன நிறுத்துமிடக் கட்டணம் இருமடங்காக உயர்வு

விதிகளை மீறினால் நடவடிக்கை

அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது, 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதில் வழக்குப்பதிவு செய்தல், சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலித்தல், மற்றும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.

மேலும் படிக்க | தண்ணீர் வீணாக்கினால் போலீஸ் கேஸ்? குடிநீரை வீணடித்தால் ரூ. 10000 அபராதம் -புனே மாநகராட்சி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES