SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அனைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பது கட்டாயம்! அரசு அதிரடி உத்தரவு..

கர்நாடகாவில், பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் கொடுப்பது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 24, 2026, 18:33 IST | Updated: Nov 24, 2026, 18:37 IST
Image Credit: Free Sanitary Napkins In Karnataka | X Page
Join

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான  பள்ளி மானவிகளுக்கு, இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவது  கட்டாயம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

பள்ளிகளுக்கு அரசு கொடுத்த வார்னிங்!

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் சானிட்டரி நாப்கின் கொடுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதை ஏதேனும் பள்ளிகள் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எனப்படும் என்றும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பள்ளி கல்வித்துறை சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: இனி ஒவ்வொரு ஆண்டும் 6% ஊதிய உயர்வு? அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

அந்த சுற்றறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்குட்பட்ட, மக்கும் தன்மையுடைய சானிட்டரி நாப்கின்களை அனைத்து பல்லிகளும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பெண்கள் கழிப்பறைகளில் தானியங்கி வெண்டிங் இயந்திரங்களை நிறுவுவதன் மூலம், அந்தப் பொருட்களை எளிதில் அணுகும்படி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக இயந்திரங்களை நிறுவ முடியாத பட்சத்தில், கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் நாப்கின் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை செய்ய தவறினால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி கழிவறைகளில் சுகாதார வசதிகள்..!

பள்ளிகளுக்கு, 3 மாதங்கள் மாதவிடாய் சுகாதாரத்தை ஏற்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்று உள்ளாடைகள், வேறு சீறுடை, ஒருமுறை பயன்படுத்தும் பைகள் உள்ளிட்டவற்றை வைக்க வேண்டும் என்பதும், இதில் அடங்கும். இந்த வசதிகள், பிள்ளைகள் எதிர்பாராத விதமாக மாதவிடாயை சந்தித்தால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் பள்ளியில் இருக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் இருக்க வேண்டும் என்றும், அந்த கழிவறைகளில் தண்ணீர் வசதி மற்றும் கைக்கழுவும் வசதி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கழிவறைகளிலும் சுகாதார குப்பைகளை போடுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதை பள்ளிகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளில் அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் என்றும், சானிட்டரி நாப்கின், பொது சுகாதாரம், குப்பை அகற்றுதல், மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நடத்துதல் உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Explained: உடல்நலக்குறைவு, மகப்பேறு... இனி விண்ணப்பிக்காமலேயே பணம் கிடைக்கும்!! ESIC புதிய விதிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES