SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மாணவர்கள் த*கொலையை தடுக்க..மின்விசிறியை மாற்றிய பல்கலைக்கழகம்! வலுக்கும் கண்டனம்..

குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதிகளில், தற்கொலை தடுக்கும் விதமாக 354 ஸ்ப்ரிங் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன; இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 24, 2026, 07:37 AM IST | Updated: Oct 24, 2026, 07:51 AM IST
Join

குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில், வீர் நர்மத் சவுத் குஜ்ராத் யுனிவர்சிட்டி எனும் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இங்கிருக்கும் மாணவர் விடுதியில்தான், அவர்களின் த*கொலையை தடுக்கும் நோக்கில் Spring Fan அதாவது சீலிங்கில் பொருத்தப்பட்ட ஸ்ப்ரிங் மின்விசிறிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

விபரீத முடிவுகளை தவிர்க்க வழி..?!

வீர் நர்மத் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளில், மொத்தம் 354 ஸ்ப்ரிங் பொருத்தப்பட்ட மின்விசிறிகள் சீலிங்கில் மாட்டப்பட்டிருக்கின்றன. இவற்றை, அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது எனும் நோக்கில் மாட்டியிருப்பதாக பல்கலைக்கழகத்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதனை அவர்கள் Anti-Suicide Fans என்று அழைப்பதோடு, இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்ப்ரிங் மின்விசிறியில் யாரேனும் த*கொலை செய்துகொள்ள நினைத்து, இதில் கயிறு அல்லது துப்பட்டா எதையேனும் மாட்டினால், அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப இந்த மின்விசிறி கீழே சரியும். இதனால்தான் இந்த வகையான மின்விசிறிகள் இந்த பல்கலைக்கழகத்தில் மாட்டப்பட்டிருக்கின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் 158 ஸ்ப்ரிங் மின்விசிறிகளும், மாணவர் தங்கும் விடுதிகளில் 110க்கும் மேற்பட்ட ஸ்ப்ரிங் மின் விசிறிகளும் மாட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, இப்படி பொருத்தப்பட்டிருக்கும் மின்விசிறிகளில், ஒரு மின்விசிரிக்கு ரூ.1500 வீதம், 354 யூனிட்களுக்கு ரூ.5.31 லட்சம் செலவாகி இருப்பதாக கூறப்படுட்கிறது. இந்த மின்விசிறியை அவர்கள் பாதுகாப்பு வழிமுறையாக கருதினாலும், இணையதளத்தில் இது ஒரு பெரும் விவாத பொருளாகவே மாறி இருக்கிறது.

விவாதத்தை கிளப்பியது ஏன்?

குஜராத் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி இரு வகையில் மக்களை சென்று சேர்ந்துள்ளது. ஒரு சிலர், இதனை நல்ல வழிமுறை என்று கூற, இன்னும் சிலர் இதனை ஒரு கேவலமான செயல் என்று கூறி வருகின்றனர். மாணவர்களின் த*கொலையை தடுக்க அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேளாமல், கல்வி அழுத்தம் இருக்கிறதா என்பதை பாராமல், இப்படி ஸ்பிரிங் மின்விசிறிகளை பொருத்துவது மட்டும் சரியா? என்பது அந்த விவாதத்தின் மையக்கருத்தாக இருக்கிறது.

மேலும் படிக்க | தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றம்: SOP-ஐ திருத்திய மத்திய அரசு

இந்த பகுதியில், மாணவர்கள் பலர் சமீப காலமாக தேர்வு காரணமாக ஏற்படும் அழுத்தம், கல்விச்சுமை போன்ற காரணங்களால் விபரீத முடிவுகளை எடுக்க தள்ளப்படுகின்றனர். இதனால், இந்த ஸ்பிரிங் மின்விசிறிகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது எப்படி வேலை செய்யும்?

இந்த ஸ்ப்ரிங் மின்விசிறிகள் எப்படி வேலை செய்யும் என்பதும், இணையத்தில் இது குறித்து அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. அதாவது, இந்த மின்விசிறியை விட 10 கிலோ அதிகமான எடை இதில் கூடும் போது அந்த ஸ்ப்ரிங் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் கிஷோர்சின் சாவ்தா, எடை கூடுகையில் இந்த தொழில்நுட்பம் தானாகவே ஆக்டிவேட் ஆகிவிடும் என்றும், மின்சாரத்தை உடனடியாக துண்டித்து மின்விசிறியை கீழே விழச்செய்யும் என கூறியிருக்கிறார்.

இது எப்படி செயல்படும் என்றும் அவரே குஜராத்தின் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் செய்து காண்பித்திருக்கிறார். அப்போது ஒரு போர்வையை அந்த மின்விசிறியில் அணிவித்து மின்விசிறியை பிடித்து இழுத்தார். அப்போது உடனடியாக அந்த ஸ்ப்ரிங் மின்விசிறி கீழே இறங்கி விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பு : தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் 14416 அல்லது 18000-89-14416 உள்ளிட்ட உதவி எண்களை அழையுங்கள்.

மேலும் படிக்க | 'உங்கள் மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள்": ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பாடமெடுத்த இந்தியா

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES