மனைவியுடன் சண்டை..பஞ்சாயத்து செய்த 6 பேரை தீர்த்துக்கட்டிய கணவன்! கொடூர சம்பவம்..
பெங்களூருவில், மனைவியுடன் சண்டை ஏற்பட்டதால், அதை தீர்த்து வைக்க வந்த 6 பேரை ஒருவர் கொடூரமாக கொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பெங்களூருவை சேர்ந்த கார் ஓட்டுநராக இருக்கிறர், இந்துசேகர். பார்க்க சாதுவாக இருக்கும் இவர், தன் மனைவியுடன் சேர்த்து 6 பேரை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இந்த கொலைக்கு பின் இருக்கும் காரணங்கள் என்னென்ன? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
மனைவியுடன் சேர்த்து 6 பேர் கொலை!
இந்துசேகர், சுனிதா இருவரும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு, ராஜாஜி நகர் எனும் பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இவர்கள் இருவருக்குள்ளும் கடும் சண்டை மற்றும் கைகலப்புகள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இவர்கள் பிரியும் நேரத்தில் எல்லாம் இவர்களின் உறவினர்கள் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், இவர்களுக்குள் இருக்கும் சண்டை ஓயாமல் இருந்திருக்கிறது. இதில், தன் மனைவியுடன் சண்டை போடுவதை விட, அவர் அவருடைய உறவினர்களுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்திருப்பது இந்துசேகருக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது.
மனைவியுடன் சேர்த்து 6 பேர் கொலை..!
தன் மனைவி மற்றும அவரது வீட்டு உறவினர்கள் தொடர்ந்து தங்களுக்கு இடையே வருவதால் கோபமுற்ற இந்துசேகர், அனைவரையும் கொன்று விட கொடூர திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்,
முதலில், தன் மனைவி சுனிதாவை கொன்று விடலாம் என முடிவெடுத்த அவர், அவரை தலையிலேயே மாவு அரைக்கும் கல்லை வைத்து அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர், அவருடைய உடலை நந்தி மலைக்கு எடுத்து சென்று அங்கு அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தன் மீது யாரும் சந்தேகப்படாமல் இருக்க, இந்துசேகர் இன்னொரு திட்டத்தையும் தீட்டியிருக்கிறார். தன் மனைவி அவருடைய நண்பர்களுடன் டூர் சென்றிருப்பதாக தெரிவித்த அவர், அதனால் அவருடைய போனும் ஸ்விட்ச் ஆபில் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதற்கு மறு நாள், தன்னுடைய மனைவி வீட்டு உறவினர்கள் 6 பேரையும் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இதில், அவருடைய மச்சான்களான சிவகுமார் மற்றும் சங்கர் உள்ளிட்டோரும் அடக்கம். அவர்களை மது அருந்த வருமாறு அழைத்து அவர்களையும் கொன்று போட்டிருக்கிறார்.
பின்னர், தன் மச்சான்களின் மனைவி மற்றும் சங்கரின் 7 வயது மகன் உள்ளிட்டோரை கொன்றிருக்கிறார். விசாரணையில், இவர்களில் ஒவ்வொருவராக வீட்டிற்கு அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கொன்ற பின்பு இவர்கள் அனைவரின் உடல்களையும் வெவ்வேறு இடங்களில் டிஸ்போஸ் செய்துள்ளார். பின்பு வீட்டில் அனைத்தையும் சுத்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸார் விசாரணை..!
இறந்த பெண்ணின் தாயார் தன் மகள் மற்றும் உறவினர்களை காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரின் பேரில், போலீஸர் காணாமல் போனவர்ளை தேடி வந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் முதலில், அந்த 7 வயது குழந்தையின் உடல் நந்தி மலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதற்கு இந்து ராஜுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று போலிசார் சந்தேகித்திருக்கின்றனர்.
போலீசார், இந்துராஜை பிடித்து விசாரித்ததை அடுத்து, அவர் தான் கொலை செய்ததையும் எதற்காக இந்த கொலைகளை செய்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். பல நாட்களாக குடும்பத்துக்குள் சண்டை வந்ததாகவும், இதனால் மன உளைச்சளில் அவர்களை கொன்றதாகவும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்றும், இதை திட்டமிட்டு அவர் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம், கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.