SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பீதியை கிளப்பும் அதீத வெப்பம்: இந்தியாவில் அதிகரிக்கும் குறைப்பிரசவங்கள்.. உயிருக்கே ஆபத்தாம்!

Preterm Babies Explained: அதிகரித்து வரும் வெப்பத்தால், இந்தியாவில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக வெப்பம் எப்படி கர்ப்பிணிகளை பாதிக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 06, 2026, 02:42 PM IST | Updated: Nov 06, 2026, 03:03 PM IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Preterm Babies Explained: எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான வெப்பம், அதீத மழை போன்றவையால் பல மாநிலங்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், அதீத வெப்பத்தால் கர்ப்பிணிகள் பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதீத வெப்பத்தால் குறைப் பிரசத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்த குறைப்பிரசவங்கள்

ஜீ காரபன் அனலிட்டிக்ஸ் என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிலவிய அசாதாரணமான கடுமையான வெயில் காரணமாக, இந்தியாவில் வழக்கத்தை விட கூடுதலாக சுமார் 10,050 கர்ப்பிணிகள் குறைப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவரத்தால், 2050ஆம் ஆண்டுக்குள் ஏப்ரல் மாதத்தில் குறைப் பிரசவத்தில் 15,300க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 2024ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் கடுமையான வெயில் பதிவானது. அனால், வரும் காலங்களில் வெப்பநிலை மோசமாக இருக்கும என புதிய கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2041 முதல் 2060 வரையிலான காலகட்டத்தில், ஒரு சாதாரண ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் வெப்ப அலை கூட, 2024-ல் ஏற்பட்ட தீவிர வெயிலை விட அதிகமாக இருக்கும் எனவும் இதனால், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெப்பத்தால் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாக வரும் காலங்களில் இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைப்பிரசவம் இந்தியாவில் ஏற்கனவே சுகாதார பிரச்னையாக இருக்கும் சூழலில், உயர்ந்து வரும் வெப்பநிலை கர்ப்பிணிகளுக்கு புதிதாக பிறந்த குழநதைகளுக்கும் மேலும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகளவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பதற்கு குறைப்பிரசவம் முதன்மை காரணமாக உள்ளது.  மேலும் இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், நரம்பு வளர்ச்சி என நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Explainer: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு - குற்றவாளியை பிடித்த உடனேயே தொடங்கும் 24 மணி நேர கெடு!!

கர்நாடகாவில் அதிகபட்ச பாதிப்பு

ஜீரோ கார்பன் அனலிட்டிக்ஸ் (ZCA) அமைப்பின் ஆய்வின்படி, 1991-2020 காலகட்டத்தின் சராசரி தட்பவெப்பநிலையோடு ஒப்பிடுகையில், 2024 ஏப்ரல் மாதத்தில் வீசிய வெப்ப அலையால் இந்தியாவில் குறைப் பிரசவங்களின் (Preterm births) எண்ணிக்கை 3.6% அதிகரித்துள்ளது. இதில் பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலேயே 65% குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும் அபாயம் உள்ளது.

மேற்கு வங்கத்தில் 10 சதவீதம் அபாயம் உள்ளது.  காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வெப்பநிலை உயர்வு குறித்த ஆய்வில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆசிய நாடுகளின் நிலவரம் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 1000 பிரசவங்களில் 12 சதவதம் குறைப்பிரசவம் நடக்கிறது. அங்கு சுமார் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு இருப்பதால், குறைப்பிரசவம் விகிதம் அதிகமாக உள்ளது.

இந்தியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் சுமார் 10,600 குறைப் பிரசவங்கள் நடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இந்த மூன்று நாடுகளிலும் ஒட்டுமொத்த வெப்ப அலை நிகழ்வின் காரணமாக மட்டும் தோராயமாக 16,150 கூடுதல் குறைப்பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தால் எப்படி குறைப்பிரசவம் நடக்கிறது?

இந்தியாவில் மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 10.6 நாட்கள் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கம் வெறும் பக்கவாதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் நின்றுவிடுவதில்லை; அது மனித உடலின் பல்வேறு அமைப்புகளையும் கடுமையாகப் பாதிக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பது இதயம் மற்றும் சிறுநீரக அமைப்புகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே உள்ள நோய்களை தீவிரப்படுத்துகிறது.தூக்கத்தைக் கெடுக்கிறது மற்றும் வேலை செய்யும் திறனைக் குறைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், வறட்சி, உணவு தட்டுப்பாடு ஆகியவை ஊட்டச்சத்து குறைபாட்டையும், நோய்கள் தாக்கும் அபாயத்தை மேலும் மோசமாக்குகின்றன.  அதீத வெப்பம் கர்ப்பகாலம் பெண்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க: இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலின் தொற்றுநோயால் நிபுணர் கூறுகையில், வெப்பம் உடலின் நீர்ச்சத்தைக் குறைத்து, இதய அமைப்பில் அழுத்தத்தை உண்டாக்கி, நஞ்சுக்கொடிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனுடன் அழற்சி மற்றும் பிரசவ வலியை தூண்டும் உயிரியல் செயல்பாடுகள் இணைவதால் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க வாய்ப்பள்ளது.

வெப்பம் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயரும் போதும், முன்கூட்டிய பிரசவம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 4% அதிகரிக்கிறது. தீவிரமான வெப்ப அலை வீசும் குறைப்பிரசவங்களின் அபாயம் 26% வரை உயர்கிறது என ஜீரோ கார்பன் அனலிட்டிக்ஸ் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதிகரித்து வரும் தீவிர வெப்பத்தில் இருந்து தாய்மார்களையும் பிறந்த குழந்தைகளையும் பாதுகாக்க, கர்ப்பகால பராமரிப்பு, சமூகதாய்மை சுகாதார சேவைகள் மற்றும் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பின் தயார்நிலை ஆகியவற்றில் வெப்ப அபாயத்தை ஒரு வழக்கமான முக்கிய காரணியாகக் சேர்க்க வேண்டும் என்று 'ஜீரோ கார்பன் அனலிட்டிக்ஸ்' (ZCA) ஆய்வு வலியுறுத்துகிறது.

 மேம்படுத்தப்பட்ட கர்ப்பகால பராமரிப்பு, பொது இடங்களில் குளிர்விக்கும் வசதிகள் (Cooling facilities) மற்றும் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அமைப்புகள் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கூடுதல் முன்கூட்டிய பிரசவங்களில் சிலவற்றைத் தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் மட்டுமே ஒட்டுமொத்த சுமையையும் முழுமையாக நீக்கிவிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES