• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு

வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு

Vettri Veedu Thittam: முதல்வர் விஜய்யின் வெற்றி வீடு திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக 70,000 வீடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. யாருக்கெல்லாம் இலவச வீடு கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 06, 2026, 03:47 PM IST|Updated: Nov 06, 2026, 03:57 PM IST
joinshare
வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சந்தை சரிவில் பங்குகளை வாங்கலாமா? Buy the Dip முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

சந்தை சரிவில் பங்குகளை வாங்கலாமா? Buy the Dip முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

2

அக்னிபத் திட்டத்தில் சேரும் அக்னிவீரர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடியாதா? என்ன காரணம்?

3

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரட்டை ராஜயோகம்.. இந்த 5 ராசிகளுக்கு பணமழை!

4

வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு

5

Explainer | கிரீன் பட்டாசு என்றால் என்ன? Green Crackers பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய உண்மைகள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vettri Veedu Thittam: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில், 2026-27ஆம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இலவசமாக 70,000 வீடுகள்

மத்திய, மாநில அரசுகளின் பழைய வீடு திட்டங்களில் யூனிட் காஸ்ட் மிக குறைவாக இருப்பதால், குறைந்தபட்ச அளவில் கூட வீடு கட்ட முடியவில்லை என புகார் எழுந்தது. எனவே, முழுக்க முழுக்க மாநில அரசு நிதியில் புதிய திட்டமான வெற்றி வீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டப்படும்.

இதில் வீட்டின் அளவு 360 முதல் 500 சதுர அடி வரை, RCC கூரையுடன், சமையலறை இருக்கும். ஒரு வீட்டின் செலவு ரூ.5 லட்சம் ஆகும். 2026-27ம் ஆண்டில் *70,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவாக ரூ.3521 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. கூடுதலாக தனி நபர் கழிப்பறை (IHHL) Swachh Bharath Mission-Gramin திட்டத்தில் ரூ.12,000-ல் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி நாளில் வெளுத்து வாங்கப்போகும் மழை: 8 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • டிஜிட்டல் மூலம் வலுவூட்டப்பட்ட, தன்னிறைவு பெற்ற, வறுமை ஒழிக்கப்பட்ட கிராமங்களை உருவாக்குவது.
  • வீடு வீடாக சென்று மொபைல் App மூலம் புதிய கணக்கெடுப்பு நடத்தப்படுத்தப்படும்.
  • கணக்கெடுப்பு பட்டியல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலும் tnrd.tn.gov  கீழ் இணையதளத்திலும் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலும் அதே போல் வெளிப்படையாக ஒட்டப்படும்.
  • TNSRLM மூலம் சமுதாய முதலீட்டு நிதி (CIF) ரூ.50,000 வரை 6% வட்டியில், அல்லது கூட்டுறவு / வணிக வங்கிகள் மூலம் ரூ.1,00,000 வரை வீட்டுக் கடன் வழங்கப்படும்.
  • இதற்கான வட்டியில் ஆண்டுக்கு 3% வரை அரசே 15 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,521 கோடி நிதி ஒதுக்கீட்டில் 70,000 குடும்பங்களுக்குச் சொந்த வீடு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @BussyAnand #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople https://t.co/CDA2FL0RHh

— TN DIPR (@TNDIPRNEWS) November 6, 2026

யாருக்கெல்லாம் முன்னுரிமை?

குடிசை வீடுகள், மண் சுவர் வீடுகள் (எந்த கூரையாக இருந்தாலும்), கூரை மட்டும் குடிசையாக உள்ள வீடுகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்தினாளகிள், திருநங்கைகள், பட்டியலின மற்றும பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2026 -27ஆம் ஆண்டு முதல் 2030-31ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெற்றி வீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுககும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்துவதையும், வீடுகள் தரமான முறையில் கட்டப்படுவதையும் உறுதி செய்து, திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அரசுக்க சமர்பிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Explained : அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ஊழல்..? முதல்வர் விஜய் சொல்லும் பதில்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes