கர்நாடகாவில், பல்வேறு டெல்டா பகுதிகள் எல் நினோ காரணமாக மழையின்றி வறண்டு போயின. இதனால், அந்த மாநிலத்தின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் நிவாரண தொகையை அறிவித்திருக்கிறார்.
பெங்களூருவில் சமீபத்தில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் நிலவும் கடும் வறட்சியால், சுமார் 200க்கும் மேற்பட்ட தாலுக்காக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த தகவல்களை திரட்டி, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக கூறிய அவர், வறட்சி நிலவரரத்தை பார்வையிட மத்திய அரசின் குழுவை அனுப்ப கோரியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று கூறிய டி.கே.சிவகுமார், கர்நாடக விவசாயிகளின் கவலையை போக்குவதில் தங்களின் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடக விவசாயிகளின் கவலையை போக்கும் பொருட்டு, முதற்கட்டமாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதில், முதல் தவணையாக ரூ.2,500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தகுதியிருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த உதவித்தொகை சென்றடையும் என்றும், சமூக் வலைதளங்களில் பரவும் எந்த வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த தொகைகளானது, உரியவர்களுக்கு சென்று சேர்வதில் சில நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறிய அவர், அதை தவிர்க்க அதற்குரிய அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு நிவாரண நிதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் நாங்கள் ரூ.5000 வரை விவசாயிகளுக்கு வழங்குவோம் என டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இதுதவிர, வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து துணை முதல்வரான பரமேஷ்வரா பேசுகையில், வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக அரசு முதற்கட்டமாக ரூ.1,250 கோடி ஒதுக்கி இருப்பதகவும் இதனால் சுமார் ரூ.50 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடையும் எனவும் கூறினார்.