• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /60 நாளில் ரூ.9 லட்சம்.. தூங்கியே சம்பாதித்த மும்பை பெண்.. எப்படி தெரியுமா?

60 நாளில் ரூ.9 லட்சம்.. தூங்கியே சம்பாதித்த மும்பை பெண்.. எப்படி தெரியுமா?

Wakefit Sleep Internship: மும்பையைச் சேர்ந்த பெண் தூங்குவதையோ ஒரு அரிய வாய்ப்பாக மாற்றி, 60 நாட்களில் ரூ.9.63 லட்சம் சம்பாதித்துள்ளார். ரொக்கப்பரிசு மற்றும் இலவச சுற்றுலாவை வென்று, அப்பெண் சாதனை படைத்துள்ளார். இந்த வினோத நிகழ்வு குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 10, 2026, 01:36 PM IST|Updated: Nov 10, 2026, 01:54 PM IST
joinshare
60 நாளில் ரூ.9 லட்சம்.. தூங்கியே சம்பாதித்த மும்பை பெண்.. எப்படி தெரியுமா?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Wakefit Sleep Internship: தூங்கிக் கொண்டே பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்விகளை நாம் எழுப்பி இருப்போம். ஆனால், அது உண்மையிலேயே நடந்தும் இருக்கிறது. ஆம்! இந்தியாவின் பிரபல மெத்தை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான wakefit நடத்திய வித்தியாசமான sleep internship போட்டியில் மும்பையைச் சேர்ந்த பெண் தூங்கும் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.6 லட்சம் பரிசை வென்றுள்ளார். மேலும், இந்நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா பேக்கேஜும் வழங்கப்பட்டுள்ளது.

தூங்கும் போட்டி

Wakefit நிறுவனம் ஆண்டுதோறும் sleep Internship என்ற போட்டியை நடத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியை நடத்தி வருகிறது. Wakefit நிறுவனம் ஐந்தாவது சீசன் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.  பல்வேறு கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்காணலுக்கு பிறகு 10 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த சுமார் 60 நாட்கள் நடைபெற்றது.    

60 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தினமும் 9 மணி நேரம் தூங்குவது முக்கிய இலக்காக இருக்கிறது. பங்கேற்பாளர்களுக்கு மெத்தை, தலையணை, தூக்கத்தை கண்காணிக்கும் கருவியும் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் தூங்கும் நேரம், தூக்கத்தின் தரம், தினசரி செயல்திறன் ஆகியவை தொடர்ந்து அந்நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தன.

மேலும் படிக்க: செங்கல்லால் அடித்து பெண்ணை கொலை செய்த Facebook Friend: காசியாபாத்தில் கொடூரம்

இந்தப் போட்டியாளர்களுக்கு அவர்களின் தூக்கத்தின் தரத்தின் அடிப்படையில் தினமும் புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்தப் புள்ளிகளின் அடிப்படையில் ஒரு 'தரவரிசைப் பட்டியல்' உருவாக்கப்பட்டது. இந்தப் பட்டியல், யார் சிறந்த தூக்கத்தைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டியது.  இருப்பினும், இந்தப் பயிற்சிக்கு, தூங்குவது மட்டும் போதாது, போட்டியாளர்கள் தங்கள் படைப்பாற்றலையும் நிரூபிக்க வேண்டியிருந்தது.

வாரந்தோறும் சுவாரஸ்யமான சவால்கள் நடத்தப்பட்டன. திரைப்படக் காட்சிகளைத் தூக்கம் தொடர்பான நகைக்சுவையுடன் மீண்டும் நடிப்பது, தங்களது தூக்கப் பழக்கங்களைப் பதிவு செய்வது, உரையாடலின்போது போட்டியாளர்கள்  'போர்வை' அல்லது 'தலையணை' என்ற வார்த்தைகளை 10 முறை பயன்படுத்த வேண்டும். இந்த வார்த்தைகள், மற்றவருக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தப் பணியைக் கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், உரையாடலில் இயல்பான தொனியைப் பராமரித்துக்கொண்டே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிகவும் சுவாரஸ்யமான சவாலாக இருந்தது. ஒவ்வொரு வாரமும், சிறப்பாகச் செயல்பட்ட போட்டியாளருக்கு 'வாரத்தின் சிறந்த உறக்க நிபுணர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: 8வது ஊதியக் குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

மும்பை பெண் வெற்றி பெற்றது எப்படி?

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜினியா சாட்டர்ஜி, ரத்னகிரி மணிகண்டன் மற்றும் மெஹக் கோட் ஆகியோர் முதல் மூன்று பேர் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர். இருப்பினும், வாராந்திர கிரியேட்டிவ் சவால்களில் அதிக வெற்றிகளைப் பெற்றிருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த கரீம் கான், வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் களமிறங்கியதால், இறுதிப் போட்டியின் போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இவர்களுக்கு இறுதிக்கட்டமாக சில போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் சுற்றாக இது போட்டியாளர்களின் கவனிப்புத் திறன், நினைவாற்றல் மற்றும் குழுப்பணியைச் சோாதிக்கும் வகையில் அமைந்தது. கொடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து, போட்டியாளர்கள் அதே போன்ற படுக்கையறை அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்.

இரண்டாவது சுற்று, இதில் இறுதிப் போட்டியாளர்கள் தூக்கத்திற்குத் தேவையான தலையணைகள், போர்வைகள், ஏசி, விளக்குகள் மற்றும் சத்தத்தைக் கட்டுப்படுத்தும் வசதிகள் போன்றவற்றை ஏலம் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். இறுதியில், போட்டியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் படுக்கையறையில் ஒரு இரவு முழுமையாகத் தூங்கினர். அவர்களின் தூக்கத்தின் தரத்தைக் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.

இதில் மும்பையைச் சேர்ந்த பெண் சாட்டர்ஜி வெற்றி பெற்று, ரூ. 9.6 லட்சம் பரிசும், 'வேக்பிட் நிறுவனத்தின் இலவச சுற்றுலா பேக்கேஜையும் பெற்றார். நீங்கள் அடுத்த சீசனில்  கலந்துகொள்ள விரும்பினால், 'வேக்பிட்' (Wakefit) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காங்கிரஸுக்கு காத்திருக்கும் ஆப்பு! வரலாறு காணாத அளவில் குறைந்த நன்கொடை.. என்ன காரணம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India