• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /நேஹா போரா விடுவிப்பு... அபிஜித் தீப்கே கைது - டெல்லியில் பரபரப்பு

நேஹா போரா விடுவிப்பு... அபிஜித் தீப்கே கைது - டெல்லியில் பரபரப்பு

நேஹா போரா மற்றும் அபிஜீத் தீப்கே ஆகியோர் டெல்லி போலீசாரால் நேற்று (அக். 16) மாலை தடுப்புக் காவல் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். அபிஜீத் தீப்கேவை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கும் டெல்லி போலீசார், நேஹா போராவை அதிகாலையில் விடுவித்துள்ளனர்.

Written BySudharsan G
Published: Oct 17, 2026, 06:19 AM IST|Updated: Oct 17, 2026, 07:38 AM IST
joinshare
நேஹா போரா விடுவிப்பு... அபிஜித் தீப்கே கைது - டெல்லியில் பரபரப்பு
Image Credit: Neha Bora, Abhijeet Dipke (L-R) | Screen Grab : X/@neha_aisa, X/@Cockroachisback

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delhi Latest News Updates: AISA மாணவ அமைப்பின் தேசிய தலைவர் நேஹா போரா மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே ஆகியோர் நேற்று (அக். 16) தடுப்புக் காவல் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Delhi | AISA National President Neha Bora and activist Abhijeet Dipke were detained under preventive sections on the evening of October 16. Neha Bora was subsequently released after formal procedures under Section 65 of the Delhi Police Act, while action under Section 126/170 of the BNSS was initiated against Abhijeet Dipke, who will be produced before the SEM court: Delhi Police

— ANI (@ANI) October 17, 2026

இதில், நேஹா போராவை அதிகாலையில் விடுவித்துள்ள டெல்லி போலீசார், அபிஜீத் திப்கே டெல்லி SEM நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கிற்குச் செல்லக்கூடாது என்று அபிஜீத் திப்கே இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை மீறியதாக கூறப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடும் என்பதன் காரணமாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால்...

இதற்கு முன்னதாக, தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் சமர்பித்த பிரமாண பத்திரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் என தீப்கே உறுதியளித்திருந்தார். அந்த வகையில், இன்று நீதிமன்றத்தில் அபிஜீத் தீப்கே ஆஜர்படுத்தப்படும்போது, பிரமாண பத்திரத்தின் உறுதிமொழியை அவர் மீறியுள்ளார் என காவல்துறை நீதிபதியிடம் வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் 50 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையைச் செலுத்தியதாகவும், ஓராண்டுக்கு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மூவர்ணக் கொடி போராட்டம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகவும் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்ததை தொடர்ந்து அபிஜீத் திப்கே கைது செய்யப்பட்டார்.

அபிஜீத் திப்கே எங்கே...?

அபிஜீத் திப்கே கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்திருந்தாலும், அவர் எங்கே காவலில் வைக்கப்பட்டுள்ளார் என காக்ரோச் ஜனதா கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. அபிஜித் தீப்கே டெல்லி போலீசாரால் கடத்தப்பட்டார் என சிஜேபி குற்றஞ்சாட்டி வருகிறது.

அவர் கடத்தப்பட்டு 10 மணிநேரத்திற்கு மேல ஆகியும், இதுவரை அவரது பெற்றோருக்கோ, வழக்கறிஞர்களுக்கோ அல்லது தலைமை நீதிபதி குழுவிற்கோ அவர் இருக்கும் இடம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என சிஜேபி அதன் X பக்கத்தில் இன்று அதிகாலை 2.50 மணிக்கு பதிவிடப்பட்டுள்ளது.

அதேபோல் நேஹா போராவும் நேற்று மாலை கைது செய்யப்பட்ட பின்னர் அவரை எங்கே கொண்டுசென்றார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. பின்னர் அவர் டெல்லி ஆர்.கே. புரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வழக்கறிஞர்கள், அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

விடுதலையான பின்னர் நேஹா போரா

தற்போது விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஊடகத்திடம் பேசிய நேஹா போரா, "சட்டமும் ஒழுங்கும் எல்லா விதத்திலும் மீறப்படுகின்றன. சாதாரண குடிமக்கள் கொடூரக் குற்றவாளிகளப் போல நடத்தப்படுகிறார்கள். இந்த நாட்டில் நீண்ட காலமாகத் தொடரும் நடைமுறை இது. மக்கள் பகலிலோ மாலையிலோ தடுத்து வைக்கப்பட்டு இரவு முழுவதும் காவலில் வைக்கப்பட்டு, மறுநாள் காலையிலோ மாலையிலோ மட்டுமே விடுவிக்கப்படுகிறார்கள் என்பதை தற்போதைய இயக்கம் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது.

இது எந்த அதிகாரத்தின் கீழ் நியாயப்படுத்தப்படுகிறது? கைதிகளை இரவு முழுவதும் காவலில் வைப்பது எந்த சட்டத்தின் அல்லது உத்தரவின் கீழ் அனுமதிக்கப்டுகிறது? சட்டப்படி தனிநபர்கள் அதிலும் குறிப்பாக பெணகள் சூரியன் மறைந்த பிறகு விடுவிக்கப்பட வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை" என குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்து எஸ்ஐஆர் நடவடிக்கையை முடக்கும்படி கோரிக்கை வைத்துள்ள அவர், அப்போதுதான் இந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு தங்களின் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள முடியும் என்றும் நேஹா போரா தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi