• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Operation Kala Pani: ஜூபிலன்ட் ஆலையால் 7 பேர் பலி? சுற்றுச்சூழல் பாதிப்பை அம்பல்ப்படுத்திய கிராமவாசிக்கு மிரட்டல்?

Operation Kala Pani: ஜூபிலன்ட் ஆலையால் 7 பேர் பலி? சுற்றுச்சூழல் பாதிப்பை அம்பல்ப்படுத்திய கிராமவாசிக்கு மிரட்டல்?

ஜூபிலன்ட் இங்கிரேவியா ரசாயன ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய கிராமவாசி அஜய்பாலுக்கு ஆலை நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written ByR Balaji
Published: Nov 15, 2026, 11:17 IST|Updated: Nov 15, 2026, 11:20 IST
joinshare
Operation Kala Pani: ஜூபிலன்ட் ஆலையால் 7 பேர் பலி? சுற்றுச்சூழல் பாதிப்பை அம்பல்ப்படுத்திய கிராமவாசிக்கு மிரட்டல்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரெளலாவில் செயல்பட்டு வரும் ‘ஜூபிலன்ட் இங்கிரேவியா’ (Jubilant Ingrevia) ரசாயன ஆலையால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து, ஜீ மீடியா ‘ஆபரேஷன் காலா பானி’ (Operation Kala Pani) என்ற பெயரில் புலனாய்வு செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஜீ நியூஸில் ஒளிபரப்பான இந்த செய்தியில் ஆலையை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் தங்களது குடும்பங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும், கொடிய நோய்களுக்கும் இந்த ரசாயன ஆலையே காரணம் என தங்களது வேதனைகளை பகிர்ந்திருந்தார். குறிப்பாக, அஜய்பால் என்ற கிராமவாசி, கடந்த 7 ஆண்டுகளில் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாக பேட்டியளித்திருந்தார்.

மிரட்டல் விடுத்த ஆலை நிர்வாகம்?

ஜீ நியூஸின் இந்த புலனாய்வு செய்தி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. செய்தி வெளியானதை தொடர்ந்து நவம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அஜய்பாலை ஆலை நிர்வாகத்தினர் அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கு இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். உண்மையை மட்டுமே பேசுவேன் என்று அஜய்பால் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மிரட்டல் குறித்து ஜீ நியூஸ் செய்தியாளர், கஜ்ரெளலா ஆலையின் சி.எஸ்.ஆர் அதிகாரி புந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”நாம் யாரை மிரட்டினேன்? யார் இதுபோன்ற புகாரை உங்களிடம் சொன்னது” என மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அஜய்பாலை தொலைபேசி இணைப்பில் செய்தியாளர் கொண்டு வந்துள்ளார். அப்போது பேசிய அஜய்பால், ”ஆமாம், நான் தான் சொல்கிறேன். அங்கே ஒரு மருத்துவர் இருந்தார். அவர் என்னிடம் 'நீங்கள் ஏன் அப்படிப் பேசினீர்கள்?' எனக் கேட்டார். மேலும், இங்கே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார்" என நேருக்கு நேர் போட்டுடைத்தார். இதற்குப் பதிலளித்த அதிகாரி புந்தி, "அது தவறான தகவல், வதந்திகளை பரப்பாதீர்கள்" எனக் கூறிச் சமாளிக்க முயன்றார்.

நேரில் சென்ற ஜீ மீடியா குழு - சந்திக்க மறுத்த அதிகாரிகள்

இதனைத் தொடர்ந்து, ஆலை அதிகாரி புந்தியுடன் நேருக்கு நேர் பேசுவதற்காக நமது செய்தியாளர், பாதிக்கப்பட்ட அஜய்பாலை அழைத்துக்கொண்டு ஆலை வாசலுக்கு நேரில் சென்றார். அங்கிருந்த பாதுகாவலர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் ஆலை நிர்வாகத்தை சேர்ந்த எந்தவொரு அதிகாரியும் வெளியே வந்து சந்திக்க முன்வரவில்லை.

ஆலையில் எந்த தவறும் நடக்கவில்லை என்றால், உள்ளூர் மக்களின் குரலை ஆலை நிர்வாகம் ஏன் நசுக்கப் பார்க்கிறது? எதை மறைக்க முயற்சிக்கிறது? என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஜீ நியூஸ் தொடர்ந்து ஒலிக்கும். அடுத்தகட்டமாக, அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே, கிராமத்தில் பரவும் நோய்களுக்கு ஆலையே அடிப்படை காரணம் என்பதை ஒப்புக்கொள்ளும் அதிர்ச்சி தகவலை ஜீ நியூஸ் வெளியிட உள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India